உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.13,000 கோடியில் 16 பாலம்; பெங்களூரு மாநகராட்சி திட்டம்

ரூ.13,000 கோடியில் 16 பாலம்; பெங்களூரு மாநகராட்சி திட்டம்

பெங்களூரு; பெங்களூரின் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண, 13,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 16 மேம்பாலம் கட்ட, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:பெங்களூரின் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும்படி, துணை முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். இதன்படி போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்தி, சுமுகமான போக்குவரத்துக்கு வழி வகுக்க, மாநகராட்சி திட்டம் வகுத்துள்ளது. சுரங்கப்பாதை, ஈரடுக்கு வழித்தடங்கள் உட்பட, 16 மேம்பாலங்கள் கட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.மாநகராட்சி பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்படும். இதற்காக தயாராகிறோம். டில்லியின் ஆல்ட்டிநோக் நிறுவனம், விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.முதற்கட்டமாக 10 மேம்பாலங்கள் கட்ட, மாநகராட்சி டெண்டர் அழைத்துள்ளது. பிப்ரவரி 6 வரை டெண்டரில் பங்கேற்க வாய்ப்புள்ளது. மிச்சமுள்ள ஆறு மேம்பாலங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மேம்பாலங்களுக்கும், விரைவில் டெண்டர் அழைக்கப்படும். 16 மேம்பாலங்களுக்கும், 13,000 கோடி ரூபாய் செலவிடப்படும்.வடக்கு - தெற்கு, கிழக்கு - மேற்கு சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்துக்கு, 40,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. எனவே தனியார் ஒருங்கிணைப்பில் திட்டம் செயல்படுத்தப்படும். திட்டத்துக்கு தேவையான நிதியை கடனாக பெற, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை