வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நேற்று என்னனா அணில் குரங்கு.. இன்று என்னன்னா அரிய வகை பாம்பு... வனவிலங்குகள் கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும்
மும்பை: தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தி வந்த விமான பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து மும்பைக்கு, அரிய வகை விலங்குகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்படி மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பயணிகள் சிலரது நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருந்தது.சோதனையில், தாய்லாந்தில் இருந்து மும்பை வந்த ஒரு பயணி 16 அரிய வகை பாம்புகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பயணியின் உடைமைகளில் இருந்து 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள் மீட்கப்பட்டன. பயணியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலுக்கு பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று அதிகாரிகள் பல்வேறு கோணத்தில் விசாரிக்கின்றனர். வன உயிரின சட்டப்படி, பாம்புகளை, அவற்றின் வாழ்விடம் அமைந்துள்ள நாட்டுக்கே திரும்ப அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று என்னனா அணில் குரங்கு.. இன்று என்னன்னா அரிய வகை பாம்பு... வனவிலங்குகள் கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும்