மேலும் செய்திகள்
வானில் ஒரு அதிசய நிகழ்வு: இன்று பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!
3 hour(s) ago | 2
பொறாமையில் 4 குழந்தைகளை கொன்ற கொடூரப் பெண் கைது
3 hour(s) ago
புதுடில்லி: 2009 முதல் அமெரிக்காவில் இருந்து 18,822 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர் என ராஜ்யசபாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேசுகையில் தெரிவித்தார். ராஜ்யசபாவில் விவாதத்தின் போது ஜெய்சங்கர் பேசியதாவது: மாநில அரசுகளும் தேசிய புலனாய்வு நிறுவனமும் பல்வேறு வழக்குகளை விசாரித்து வருகிறது. இதில் பஞ்சாபில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் உள்ளது. 2009ம் ஆண்டு முதல், மொத்தம் 18,822 இந்தியர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர். 2023ம் ஆண்டில் 617 இந்தியர்களும், 2024ம் ஆண்டில் 1,368 இந்தியர்களும், ஜனவரி 2025 முதல், தற்போது வரை மொத்தம் 3,258 இந்தியர்களும் நாடு கடத்தப்பட்டு உள்ளனர். நடப்பாண்டில் நாடு கடத்தப்பட்டவர்களில் 2,032 பேர் வழக்கமான வணிக விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டனர். மீதமுள்ள 1,226 பேர் அமெரிக்க குடிவரவு துறை கட்டுப்பாட்டில் இயக்கப்படும் விமானங்கள் மூலம் வந்தடைந்தனர். பஞ்சாப் மாநிலத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான ஆட்கடத்தல் வழக்குகள் பதிவாகின்றன. பஞ்சாப் அரசு ஒரு சிறப்புப் புலனாய்வுப் பிரிவு மற்றும் உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளது. ஹரியானா மாநிலத்தைப் பொறுத்தவரை, 2,325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.
3 hour(s) ago | 2
3 hour(s) ago