உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயிற்சியின் போது விபரீதம்; குண்டுவெடித்து அக்னிவீரர்கள் 2 பேர் பலி

பயிற்சியின் போது விபரீதம்; குண்டுவெடித்து அக்னிவீரர்கள் 2 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாசிக்; நாசிக் அருகே பயிற்சியின் போது குண்டு வெடித்ததில் அக்னி வீரர்கள் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள பீரங்கி பயிற்சி மையத்தில் அக்னிவீரர்கள் வழக்கம்போல் துப்பாக்கி மற்றும் குண்டுகளை வைத்து பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக குண்டுகள் வெடித்து சிதறின.இந்த விபத்தில் அக்னிவீரர்கள் கோஹில் விஸ்வராஜ் சிங்(20), சைபத் ஷிட்(21) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து, ஹவில்தார் அஜித்குமார் அளித்த புகாரில் தியோலாலி போலீஸ், இந்த சம்பவத்தை எதிர்பாராத விபத்தாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அப்பாவி
அக் 12, 2024 03:13

நேருதான் காரணம்.


N Sasikumar Yadhav
அக் 12, 2024 08:31

உங்களுடைய பிறப்புக்கா.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 12, 2024 08:44

கிண்டலு ???? இருந்தாலும் ஆராய்ஞ்சு பார்த்தா அதுதான் உண்மை .......


Krishna R
அக் 11, 2024 20:02

ஓம் சாந்தி


RAMAKRISHNAN NATESAN
அக் 11, 2024 19:26

போரில் வீரமரணம் அடையாமல் ராணுவ வீரர்கள் பயிற்சியின்போது விபத்தில் மரணமடைவது பேரவலம் .....


தாமரை மலர்கிறது
அக் 11, 2024 18:59

கட்டிடங்களில் வேலை செய்யும் தொழிலாளிகள் தினமும் பத்து பேர் இறக்கிறார்கள். வேலைக்கு போகும் இந்தியர்களில் தினமும் நூறு பேருக்கு மேல் இறக்கிறார்கள். யாரும் கவலைப்படுவதில்லை. ராணுவ பயிற்சியின்போது சில அசம்பாவிதங்கள் நடை பெற்று உலக அளவில் தினமும் இருபது பேர் இறக்கிறார்கள் என்பது நிஜம்.


Lion Drsekar
அக் 11, 2024 17:46

இதற்க்கு முழு பொறுப்பும் பயிற்சியாளர்கள், துப்பாக்கி சுடுதல் , குண்டெறிதல் போன்ற பயிற்சியில் ஆட்டோமேட்டிக் மோடில் துப்பாக்கி அதாவது SLR , SMC , எதுக்காக இருந்தாலும் ஒரு குண்டுக்கு மேல் கொடுப்பதில்லை, அதே போல் கையெறி குண்டுகளுக்கு டெமோ பீஸ் மட்டுமே கொடுக்கப்படவேண்டும், அப்படி இருக்க எப்படி கொடுக்கப்பட்டது என்று தெரியவில்லை . முன்பெல்லாம் பயிற்சிக்கு எப்பேர்ப்பட்ட உயர் அதிகாரிகளாக JCO க்களை வைத்துதான் ட்ரைனிங் கொடுப்பார்கள் இப்போது தெரியவில்லை, இனியாவது பார்த்து இயல்பட்டால் விபத்தை தவிர்க்கலாம், வந்தே மாதரம்


Nandakumar Naidu.
அக் 11, 2024 17:44

அசம்பாவீதம் நடந்து விட்டது. இரு வீரர்கள் வீர மரணம் அடைந்து விட்டார்கள். அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஈஸ்வரனை பிரார்த்திப்போம். இனிமேல் இந்த விதமான அசம்பாவிதம் நாடக்கமல் இருக்க மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர் கட்சிகள் இந்த வீரர்களின் தியாகத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது. அப்படி செய்தால் அவர்கள் மனித குலத்தின் விரோதிகள் ஆவார்கள்.


சாண்டில்யன்
அக் 11, 2024 17:26

ஒரு கோடியா இல்லையான்னு விவாதம்/வீடியோ வெடிக்குமெ


ஆரூர் ரங்
அக் 11, 2024 22:21

கள்ளக்குறிச்சி பத்து லட்சம் ஞாபகம் வருதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை