உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரத்தம் தெறிக்க ஒரு சம்பவம்; ரீல்ஸ் வீடியோ அலப்பறை செய்த இருவர் கைது

ரத்தம் தெறிக்க ஒரு சம்பவம்; ரீல்ஸ் வீடியோ அலப்பறை செய்த இருவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கலபுரகி; கர்நாடகாவில் ரீல்ஸ் வீடியோவுக்காக நடுரோட்டில் கொலை செய்வது போல நடித்த 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ரீல்ஸ் மோகம் இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்காக எத்தகைய பைத்தியக்காரத்தனமான செயல்களையும் செய்வதற்கு சிலர் தயாராக உள்ளனர். அதில் லேட்டஸ்ட்டாக ரத்தம் தெறிக்க, தெறிக்க கொலை செய்வது போல் ரீல்ஸ் வீடியோ எடுத்து 2 பேர் பொதுமக்களை அலறவிட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு; கர்நாடகாவில் கலபுரகி மாவட்டத்தில் ஹம்னபத் ரோடு பரபரப்பாக காணப்பட்ட தருணம். ஒவ்வொருவரும் அவரவர் வேலைகளில் ஆழ்ந்து இருக்க, ஒருவர் மற்றொருவரை நடுரோட்டில் ரத்தம் தெறிக்க, தெறிக்க கொலை செய்வது போல ஒரு சம்பவம் நடந்தது. ரோட்டில் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் ஒருவர் படுத்திருக்க, அவரின் மீது ஏறி உட்கார்ந்த மற்றொருவர் முகம் முழுவதும் ரத்தத்தை பூசியவாறு 2 கைகளையும் அகல விரித்து கத்துவது போல செய்திருக்கிறார். ஏதோ மிக பெரிய விபரீதம் அரங்கேறிவிட்டது என்று அங்கே இருந்த மக்கள் பீதி அடைந்து ஓட ஆரம்பித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது அங்கிருந்த 2 பேரிடம் விசாரிக்க, அவர்கள் இருவரும் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்யவே இவ்வாறு நடந்து கொண்டது தெரிய வந்தது. உடனடியாக, அவர்களை இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பெயர் சாய்பன்னா, சச்சின் என்பது தெரிந்தது. இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kanns
மார் 19, 2025 15:54

Arrest under Extreme Public Nuisance


SIVAN
மார் 19, 2025 13:29

உத்தர் பிரதேஷ் யோகி பாபா கிட்ட ரெண்டு போரையும் பேக் பண்ணி அனுப்பிடுங்க, 10 நிமிஷத்துல வாழ்க்கைன்னா என்னன்னு புரிய வச்சுருவாரு. இந்த மாதிரி ரீலிஸ் பைத்தியத்தை எல்லாம் போலீசார் ரோடிலேயே உள்குத்தா குத்தி அனுப்பனும்.


p karuppaiah
மார் 19, 2025 13:00

ரீல்ஸை ரியல் ஆகிட்டாதான் நல்லது


Ramesh Sargam
மார் 19, 2025 12:45

போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். எதற்கு விசாரணை? அங்கேயே நாலு சாத்து சாத்தி, நடுரோட்டிலேயே தரதரவென்று அவர்களை காவல்நிலையம் வரை அழைத்துச்சென்று அங்கே மேலும் சாத்தியிருக்கவேண்டும். விசாரணையாம் விசாரணை.


theruvasagan
மார் 19, 2025 12:39

கொலை செய்கிற மாதிரி ரீல்ஸ் போட்டா சரியா போச்சா. அவனுகள ஜெயிலில் 6 மாசம் போட்டு களி திங்கறதையும் ரீல்ஸா புடிச்சி போட்டு காட்டணும். அப்பதான் கொழுப்பெடுத்து பண்ணும் இந்த மாதிரி பயித்தியக்காரத்தனத்தை செய்ய பயப்படுவானுக.


வாய்மையே வெல்லும்
மார் 19, 2025 12:11

நம்ம ஊரு போலீஸ் புத்தூர் மாவு கட்டு பிரசித்தம் .. இங்க கூட்டியாங்க . கைக்காலை உடைச்சி உப்புக்கண்டம் போட்டா தான் ரீலிஸ் மோகம் அடங்கும் ..


கலைஞர்
மார் 19, 2025 12:53

இன்னுமா நம்ம ஊர் போலீஸ் மாவு கட்டு உண்மை னு நினைக்கறீங்க...அது திராவிட மாவு கட்டு...


கல்யாணராமன்
மார் 19, 2025 13:09

இங்கே போடும் மாவுக்கட்டு நம் காதில் சுற்றும் பூ


புதிய வீடியோ