உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கஞ்சா கடத்திய 2 பேர் கைது

கஞ்சா கடத்திய 2 பேர் கைது

தங்கவயல்: தங்கவயலில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.ஆட்டோவில் கஞ்சா கடத்திச் செல்வதாக கலால் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் உரிகம் அம்பேத்கர் சாலையில் உள்ள மலையாளி திடல் அருகே கலால் பிரிவு அதிகாரிகள் ஆட்டோவை நிறுத்தினர்.அவர்கள் சோதனை நடத்தியதில் 750 கிராம் கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்தனர்.கஞ்சா கடத்திச் சென்ற ஜீவன், 35, நவீன், 34, ஆகிய இருவரை போலீசில் ஒப்படைத்தனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் தங்கவயலில் இருந்து பங்காருபேட்டைக்கு கஞ்சாவை கடத்திச் செல்ல முயன்றது விசாரணையில் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி