லாரி மீது கார் மோதி 2 சகோதரர்கள் பலி
குருகிராம்:ஹரியானாவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டிப்பர் லாரி மீது கார் மோதி சகோதரர்கள் இருவர் உயிரிழந்தனர்.பரிதாபாத் - -குருகிராம் சாலையில் நேற்று அதிகாலை 2:30 மணிக்கு அதிவேகமாக வந்த கார், சுங்கச்சாவடி அருகே, நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டிப்பர் லாரி மீது மோதியது. காரில் இருந்த பரிதாபாத் எஸ்.ஜி.எம். நகரைச் சேர்ந்த ராகுல்,30, அவரது சகோதரர் குல்தீப்,27, மற்றும் ரஜத்,23, சதேந்தர்,28 ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். பரிதாபாத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் ராகுல் மற்றும் குல்தீப் ஆகிய இருவரும் உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர். மற்ற இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்பட்டவுடன் டிப்பர் லாரி டிரைவர் லாரியுடன் தப்பினார். இந்த விபத்து குறித்து, டி.எல்.எப் போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவரை தேடுகின்றனர்.உயிரிழந்த சகோதரர்கள் உடல்கள், உடற்கூறு ஆய்வுக்குப் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. ராகுல் மற்றும் குல்தீப் ஆகியோர் பரிதாபாத் என்.ஐ.டி.,யில் ஜவுளிக்கடை நடத்தினர்.