உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரு வாழைப்பழத்துக்கு 2 குரங்குகள் சண்டை: பீஹாரில் ரயில் சேவை பாதிப்பு

ஒரு வாழைப்பழத்துக்கு 2 குரங்குகள் சண்டை: பீஹாரில் ரயில் சேவை பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹார் ரயில் நிலையத்தில் ஒரு வாழைப்பழத்துக்கு இரண்டு குரங்குகள் சண்டையிட்டதால், ரயில் சேவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.பீஹாரில் உள்ள சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் எண் 4க்கு அருகே இரண்டு குரங்குகள் வாழைப்பழத்துக்கு சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அப்போது குரங்குகளில் ஒன்று, கையில் கிடைத்த ரப்பர் போன்ற பொருளை மற்றொரு குரங்கு மீது வீசியது. அது, மேல்நிலை மின் கம்பியில் பட்டு, கம்பி அறுந்து போனது; கம்பி ரயிலின் போகி மீது விழுந்ததால், ரயில்கள் நிறுத்தப்பட்டன. ரயில் நிலைய ஊழியர்கள், மின் கம்பிகளை அகற்றி, இணைப்பை சரி செய்தனர்.இந்த பிரச்னையால், ரயில் நிலையத்தின் 4வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த பீஹார் சம்பர்க் கிராந்தி ரயில் 15 நிமிடம் தாமதமாக சென்றது. மற்ற ரயில்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. குரங்குகள் சண்டையால் ரயில் நிலைய சேவைகள் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டன.அந்த குரங்குகள் செய்த சேட்டையால் பயணிகள் சிலருக்கு காயம் ஏற்பட்டது, தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அவற்றை பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

venugopal s
டிச 09, 2024 11:10

இந்த சம்பவம் மஹாராஷ்டிரா அரசியலில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் ஃபட்னவிஸ் இருவரையும் ஞாபகப் படுத்தியது!


தீதும் நன்றும் பிறர் தர வாரா
டிச 09, 2024 07:58

குரங்கு அடித்து கம்பி அறுந்தது சூப்பர் அப்பு


N Sasikumar Yadhav
டிச 09, 2024 03:20

கோபாலபுர கொத்தடிமை கும்பலுங்க என்னென்னவோ உளறுதுங்க


Ramesh Sargam
டிச 08, 2024 21:41

ஒரு குரங்கு, மற்றொரு குரங்கிடம், ஒன்னு இங்க இருக்கு. மற்றொன்று எங்கே என்று கேட்டிருக்கும். அதற்கு அந்த இரண்டாவது குரங்கு அதுதான் இதுன்னு சொல்லியிருக்கும். சண்டை போட்டிருக்கும். குறிப்பு: யார் மனதையும் புண்படுவதற்காக இதை நான் சொல்லவில்லை. ஒரு நகைச்சுவைக்காக பதிவு செய்தேன். அவ்வளவுதான்.


மாருதிராவ்
டிச 08, 2024 21:22

குரங்குகள் அனுமன் சொரூபம்.ஒன்னும் சொல்லாதீர்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 09, 2024 10:17

இந்த ஒரு கருத்துக்காக பெயரை மாற்றிக்கொண்டீர்கள்... சரிதானே ??


Barakat Ali
டிச 08, 2024 21:18

அங்கே சசி தரூரை இரண்டு வாழைப்பழங்களுடன் அனுப்பலாம் ...


ஆரூர் ரங்
டிச 08, 2024 21:05

அர்த்தமற்ற உக்ரேன், பாலஸ்தீனப் போர்களால் சம்பந்தமில்லாத பல நாடுகளுக்கு பொருளாதார பாதிப்பு . நமது முன்னோர் குரங்குகள் காட்டும் வழி?


சாண்டில்யன்
டிச 08, 2024 22:23

குரங்குகள் காட்டும் செய்தி மேல்நிலை மின்கம்பிகள் சிறு பந்து பட்டாலே அறுந்து விழும் நிலையில் இருந்ததை கல்லும் தேங்காயுமா போட்டு உடைத்துள்ளது பல்துறை மந்திரி இதில் வெளிநாட்டு சதி இருக்கோன்னு கண்டுபிடிக்க ஆறுமாதம் இருளில் துழாவிப் கொண்டிருப்பார்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 09, 2024 10:16

சாண்டில்யன் சுட்டிக்காட்டிய பாயிண்ட் சரியே.. தவிர செய்தியில் உயரழுத்த மின்தடக்கம்பிகள் - Overhead Caternary - என்று இருந்திருக்க வேண்டுமோ? தமிழ்ப்படுத்தியதில் சிறு பிழையோ ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை