உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திராவில் துயர சம்பவம்: பஸ்சில் தீ பற்றியதில் பயணிகள் 20 பேர் பரிதாப பலி

ஆந்திராவில் துயர சம்பவம்: பஸ்சில் தீ பற்றியதில் பயணிகள் 20 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பஸ் தீப்பற்றிய சம்பவத்தில் பயணிகள் 20 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆந்திரா மாநிலம் கர்னூலில் பயணிகள் 39 பேருடன் சென்று கொண்டிருந்த சுற்றுலா பஸ் தீப்பற்றியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதில், இரண்டு பேர் சிறுவர்கள்.இவர்களது உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9j2ggozq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த இந்த பஸ் ஆந்திர மாநிலம் கர்னூலில் பைக் மீது நேருக்கு நேர் மோதி தீப்பற்றியது என விசாரணையில் தெரியவந்தது. இதில் பைக் ஓட்டி வந்த சிவக்குமார் என்ற வாலிபர், அதே இடத்தில் உயிரிழந்தார். பஸ் டிரைவர், பஸ்சில் இருந்து குதித்து கண்ணாடியை உடைத்து மற்ற பயணிகளை காப்பாற்றியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.உயிரிழந்தவர்களின் உடல்கள், அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து கருகி விட்டன. அவற்றை டி.என்.ஏ., சோதனை மூலம் அடையாளம் காண ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்ன தேகூர் கிராமத்திற்கு அருகே நடந்த பேரழிவு தரும் பஸ் தீ விபத்து குறித்து அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் வழங்குவார்கள். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

ஜனாதிபதி முர்மு இரங்கல்

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில், ''ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் பஸ்சில் தீப்பற்றியதில் உயிர் இழப்புகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்'' என குறிப்பிட்டு உள்ளார்.

நிவாரணம் அறிவிப்பு

பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துகொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும்'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

jkrish
அக் 25, 2025 19:29

தண்ணி போட்டா வண்டி எடுக்க முடியாத படி தொழில்நுட்பம் வர வேண்டும். இதே நுட்பத்தை அதிவேகத்திற்கும் பயன்படுத்த வேண்டும். பரிதாபமாக உள்ளது.


Easwar Kamal
அக் 24, 2025 17:54

பேராசை மக்களை காவு வாங்குகிறது. ஆந்திராவை தொழில்நுற்பத்தில் யுயர்த்த உள்ள வெறி மற்ற துறையில் கண்டுகொள்ளாமல் விட்டாலும் இதுதான் நிலைமை.


சிந்தனை
அக் 24, 2025 13:57

விஞ்ஞான வளர்ச்சி விஞ்ஞான கண்டுபிடிப்புகள் என்று கொண்டாடினோமே... அதற்கு விலை இதுதானா... என்ன செய்ய


V Venkatachalam, Chennai-87
அக் 24, 2025 13:18

மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவர்கள் அனைவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.


M. PALANIAPPAN, KERALA
அக் 24, 2025 12:01

மிகவும் துக்ககரமான சம்பவம், ஆழ்த்த இரங்கல்


Rathna
அக் 24, 2025 11:04

விவேகம் இல்லாத வேகம் உயிரை குடிக்கிறது. பைக், ஆட்டோகாரன் ஆம்னி பஸ் வேகம், போகும் போக்கு உயிரை கலங்க அடிக்கிறது. A/C பஸ்களில் இன்னும் ஆபத்து அதிகம்.


shyamnats
அக் 24, 2025 09:24

இருசக்ர வாகன ஓட்டிகள், ஆட்டோ, அதிவேகத்தில் பயணிக்கும் ஆம்னி பஸ்கள், தண்ணீர் மற்றும் சரக்கு வாகன ஓட்டிகள், சின்னஞ் சிறார்களிடம் ஆதிவேக இருசக்ர வாகனங்களை வழங்கும் பெற்றோர் என அனைவருக்குமே விழிப்புணர்வு தேவை. ஒரு பைக் ஓட்டுனரின் தவறால் அநியாயமாக 20 உயிர்களுக்கு மேல் பலி . பலியானவர் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்.


Ramesh Sargam
அக் 24, 2025 08:00

சுலபத்தில் தீ பிடிக்காத உலோகம் ஒன்றில் வாகனங்கள் தயாரிக்கப்படவேண்டும். உயிர்கள் காக்கப்படவேண்டும். அதிக தூரம் பயணிக்கும் பேருந்துகளில் பயணிகள் விபத்திலிருந்து தப்பிக்க குறைந்தது நான்கு கதவுகள் பொருத்தப்பட்ட பேருந்துகள் தயாரிக்கப்படவேண்டும். விபத்தில் மரணம் அடைந்த பயணிகளின் ஆன்மா சாந்தி அடையட்டும்.


Field Marshal
அக் 24, 2025 10:38

Impact தான் காரணம் ..எந்த உலோகமும் நெருப்பில் எரியாது


Balaji
அக் 24, 2025 16:13

என்னென்னமோ ஐடியா தரீங்க.. ஆனா கவனமா ஒழுக்கமா வண்டி ஓட்டணும்னு மட்டும் சொல்ல மாட்டேன்கிறீங்க.. நேருக்கு நேரா மோது அளவுக்கு அந்த பைக் எந்த பக்கம் என்ன வேகத்தில் வந்தது.. அந்த பேருந்து எந்தப்பக்கம் எந்த வேகத்தில் ஒட்டப்பட்டது? இவையல்லவா விபத்துக்கு காரணம்?


அப்பாவி
அக் 24, 2025 07:53

ரோடையெல்லாம் ராத்திரி 10 மணிக்கு மேலே காலை 5 மணிவரைக்கும் மூடிறலாம். இல்லே கதிசக்தி போட்டுத் தள்ளிக்கிட்டே இருக்கும்.


சமீபத்திய செய்தி