உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் பலி; பீஹாரில் அதிர்ச்சி

கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் பலி; பீஹாரில் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சரண்: பீஹாரில் கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீஹாரில் கடந்த 2016ம் ஆண்டு முதல் மதுவை விற்கவும், குடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இதுவரையில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு சிவான் மற்றும் சரண் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்தவர்கள், உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். முதலில் பலி எண்ணிக்கை 6 ஆக இருந்த நிலையில், தற்போது 20ஐ எட்டியுள்ளது. பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சிவான் மாவட்ட மாஜிஸ்திரேட் முகுல் குமார் குப்தா, தகவல் அறிந்தவுடன் மேஹார், அவ்ரியா பஞ்சாயத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கலால் வரித்துறையினரும் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ramesh Sargam
அக் 17, 2024 21:41

அடப்பாவிகளா, தமிழகத்தில் குடித்து இறந்திருந்தால் உங்கள் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் ஒரு பத்து லட்சம் நிவாரணம் கொடுத்து இருப்பார். போயும் போயும் பீகாரில் குடித்து இறந்து போயிருக்கிறீர்களே...


Dhurvesh
அக் 17, 2024 22:10

சங்கி எப்படி மடை மாற்றுகிற. இங்க என்ன குதிச்ச இப்ப பிஜேபி மாநிலம் என்றதும் பம்முற , உங்க வேலைய லட்டு வில் தொடங்கி சனாதனத்தில் வந்து முடித்தீர்கள் பாரு இது தான் பின்னால் இருந்து தூண்டிவிடும் கோழை செயல்


venugopal s
அக் 17, 2024 16:56

குஜராத்திலும் பீகாரிலும் மதுவிலக்கு அமலில் இருக்கும் போது தமிழகத்தில் ஏன் அமல்படுத்தக் கூடாது என்று கூவிய சங்கிகள் எல்லோரும் எங்கே போனார்கள்?


Mohammad ali
அக் 17, 2024 20:44

மூடனே. குடித்து சாகிறவனுக்கு குடிக்காதவன் வரி பணத்தை ஏன் கொடுக்கணும். வேண்டுமென்றால் கள்ளசாராயத்தை கட்டுப்படுத்த முடியாத ஆட்சி செய்யும் கட்சி கொடுக்கட்டும். குடிக்க வைத்தது திராவிட கட்சிகளே.


J.V. Iyer
அக் 17, 2024 16:45

அதெப்படி தமிழகத்தில் நடக்காமல் பீகாரில் நடக்கலாம்? இது திராவிட மாடல் சிந்தனை.


அப்பாவி
அக் 17, 2024 16:43

பிஹாரில் மதுவிலக்கு சாதிச்சுட்டாங்க. ஆளுக்கு எத்தனை லட்சமாம்?


Raghavan
அக் 17, 2024 16:16

அந்த கள்ள சாராயத்தை இங்கு வந்து குடித்துவிட்டு இறந்து இருந்தால் உங்கள் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் கிடைத்திருக்குமே. இங்கே நாங்கள் கஜானாவை இதற்கு என்றே திறந்து வைத்திருக்கிறோம்.


Rajarajan
அக் 17, 2024 15:13

ஓ, இதுதான் இந்தியா முழுவதும் பரவும் திராவிட மாடலா ? இப்போ பெருமை பேசுங்க பாப்போம்.


கத்தரிக்காய் வியாபாரி
அக் 17, 2024 13:03

தளபதி:கள்ளச்சாராயம் குடித்து இறந்த ஒவ்வொருவருக்கும் 1 கோடி ரூபாய் தமிழக கஜானாவிலிருந்து கொடுக்கப்படும்.


Kumar Kumzi
அக் 17, 2024 12:52

விடியாத விடியலின் கள்ளச்சாராய மாடல் இந்தியா முழுவதும் பரவி விடியலுக்கு மேலும் புகழை சேர்க்கிறது ஹீஹீஹீ


S Regurathi Pandian
அக் 17, 2024 12:34

கள்ளச்சாராயம் என்பது மிகப்பெரிய சந்தையாக தெரிகிறது. அரசியல்வாதிகள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, அதிகாரிகள், காவல்துறை தயவின்றி இதுபோன்று நடைபெறுவது சாத்தியமல்ல.


ديفيد رافائيل
அக் 17, 2024 12:20

தடை விதித்த ஒன்றை வாங்கி குடுத்து இறந்தவனுங்களுக்கு state government எந்தவித நிவாரண உதவியும் பண்ண கூடாது. State government நிவாரண உதவி செஞ்சா இன்னும் அந்த மாநிலத்துல alcohol drinks? மறைமுகமாக ஊக்குவிக்குறதா தான் அர்த்தம். குடும்பத்தை பற்றி அக்கறை இருந்திருந்தா state government தடை பண்ண ஒன்றை திருட்டுத்தனமா வாங்கி குடித்து இருந்திப்பானுங்களா? இவனுங்க சாகட்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை