உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மடாதிபதிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை மஹாராஷ்டிராவில் 21 போலீசார் காயம்

மடாதிபதிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை மஹாராஷ்டிராவில் 21 போலீசார் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: மஹாராஷ்டிராவில், யதி நரசிங்கானந்த் மஹாராஜ் என்ற மடாதிபதி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தில், வன்முறை வெடித்தது. கல்வீச்சு சம்பவத்தில், 21 போலீசார் காயமடைந்தனர்; 1,200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.உத்தர பிரதேசத்தின் காஜியாபாதைச் சேர்ந்த யதி நரசிங்கானந்த் மஹாராஜ் என்ற மடாதிபதி, தசரா உருவ பொம்மை எரிப்பது தொடர்பாக சமீபத்தில் பேசியபோது சில கருத்துகளை தெரிவித்தார்.அவர் தெரிவித்த கருத்துகள், தங்களின் மத உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக கூறி, அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி அமராவதியில் உள்ள நாக்பூரிகேட் போலீஸ் ஸ்டேஷனை ஏராளமான முஸ்லிம்கள் நேற்று முன்தினம் இரவு முற்றுகையிட்டனர். வழக்குப் பதிவு செய்தது தொடர்பான விபரங்களை போலீசார் அளித்ததை அடுத்து அவர்கள் திரும்பிச் சென்றனர். அடுத்த சில மணி நேரத்தில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து, பதற்றமான சூழல் நிலவியது. 1,000க்கும் மேற்பட்டோர் இருந்த கும்பல் நாக்பூரிகேட் போலீஸ் ஸ்டேஷனை நேற்று முன்தினம் நள்ளிரவில் முற்றுகையிட்டடது.இது குறித்து, போலீசார் பேச்சு நடத்திக் கொண்டிருந்த போதே கும்பலில் இருந்த சிலர், போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்கினர். போலீஸ் நிலையத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட வாகனங்களையும் அந்த கும்பல் சேதப்படுத்தியது. இதில், அதிகாரிகள் உட்பட 21 போலீசார் படுகாயமடைந்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து, அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய கும்பலை அவர்கள் விரட்டியடித்தனர். இதையடுத்து, தாக்குதல் நடத்திய கும்பல் குறித்து விசாரணை நடத்திய போலீசார், 1,200 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே உ.பி., மாநிலம் காஜியாபாதில் நரசிங்கானந்த் மஹாராஜ் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Bhaskaran
அக் 06, 2024 08:38

நம்ம ஊராக இருந்தால் மடாதிபதியை காவல்துறை சவுக்கு மாதிரி புரட்டி எடுத்திருக்கும்


பேசும் தமிழன்
அக் 06, 2024 08:12

தென்னை மரத்தில் தேள் கொட்டினால்.... பனை மரத்தில் நெறி கட்டும்.... என்பது போல் இருக்கிறது.... அப்படி பார்த்தால் இந்து மதத்தை பற்றி தவறாக பேசியதற்க்கு.... தமிழ் நாட்டில் பாதி ஆட்களை உள்ளே தூக்கி போட வேண்டும்..... இந்துக்களும் இதே போல கள்ளை தூக்க வேண்டும் என்று கூறுகிறார்களா !!!


Sathyanarayanan Sathyasekaren
அக் 06, 2024 02:54

மூளை சலவை செய்யப்பட்ட பயங்கரவாத மத கும்பல். அம்பேத்கார் சொன்னதை கேட்காமல் இந்த பயங்கரவாத கழிசடைகளுக்கு இந்தியாவில் இடம் கொடுத்து, மோகன்தாஸ் காந்தி ஹிந்துக்களுக்கு மாபெரும் துரோகம் செய்துவிட்டார். கருத்தை கருத்தால் எதிர்க்கவேண்டியது தானே?


Rajagopal Vsr
அக் 07, 2024 09:48

காந்தியின் படத்தை நம் பாரத நாட்டின் ரூபாய் நோட்டுகளில் இருந்து நீக்க வேண்டும்.அதற்கு பதிலாக அன்னை ஶ்ரீ மகா லக்ஷ்மியின் படத்தை சேர்க்க வேண்டும்.அன்றிலிருந்து தான் நம் பாரத நாட்டின் பணம் மதிப்பு மிக்க உயர்வு பெறும்.இதுவே சத்தியம் உண்மை.


Nandakumar Naidu.
அக் 06, 2024 02:35

ஹிந்துக்களிடம் ஒற்றுமை இல்லாத காரணத்தால் இவ்வாறு இவர்களின் சமூக விரோத செயல்கள் அதிகரிக்கிறது நம் நாட்டில். இந்துக்கள் பொருளாதார ரீதியாக இவர்களை அழிக்க வேண்டும். இவர்களிடம் எந்த ஒரு பொருளையும் வாங்கக்கூடாது,இவர்களின் ஹோட்டலுக்கு செல்லக்கூடாது இந்தியாவில் நாம் ஒரு சேர்ந்து இவர்களின் தொடர்பை துண்டிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை