உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசிய கொடிக்கு 21 முறை வணக்கம் செலுத்த வேண்டும்: பாக்., ஆதரவாளருக்கு உத்தரவு

தேசிய கொடிக்கு 21 முறை வணக்கம் செலுத்த வேண்டும்: பாக்., ஆதரவாளருக்கு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜபல்பூர்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய நபருக்கு, 'வழக்கின் விசாரணை முடியும் வரை, மாதமிருமுறை தேசிய கொடிக்கு 21 முறை வணக்கம் செலுத்தி, 'பாரத் மாதா கீ ஜே' என முழக்கமிட வேண்டும்' என, மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் அளித்துள்ளது.மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பைசல் எனப்படும் பைசான் என்ற நபர், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் பொது இடத்தில் கோஷம் எழுப்பியதாக மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டார். தன்னை ஜாமினில் விடுவிக்கக் கோரி, அவரது தரப்பில் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1sy5acub&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது நீதிபதி பலிவால் தன் உத்தரவில் கூறியதாவது: தான் பிறந்து வளர்ந்த மண்ணுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்த நபர் முழக்கங்கள் எழுப்பியது குற்றச்சாட்டில் உறுதியாகியுள்ளது. பிணைத் தொகையாக 50,000 ரூபாய் செலுத்தும்பட்சத்தில், அவருக்கு ஜாமின் வழங்கப்படும்.அதுமட்டுமின்றி, வழக்கு விசாரணை முடியும் வரை, போபாலில் உள்ள மிஸ்ரட் போலீஸ் ஸ்டேஷனில் ஏற்றப்படும் தேசியக் கொடிக்கு மாதந்தோறும் முதல் மற்றும் நான்காம் செவ்வாய்கிழமைகளில் காலையில், 'பாரத் மாதா கீ ஜே' என்ற முழக்கத்துடன், 21 முறை இந்த நபர் வணக்கம் செலுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Pandi Muni
அக் 18, 2024 08:20

இவனுங்கள இந்த நாட்டிலேயே வச்சிருக்கீங்க?


Iniyan
அக் 18, 2024 07:25

நீதிமன்றங்கள் எப்போதும் தேச விரோதிகளிடம் மென்மையாகவே நடந்து கொள்ளும். இந்த நீதிபதிகளை பாகிஸ்தான்னுக்கு நாடு கடத்த வேண்டும்.


RAJ
அக் 18, 2024 07:17

இவன் எல்லாம் திருந்தமாட்டான். நாடு கடத்துறது, இல்லை உலகத்தை விட்டு அனுப்பறதுதான் சரியான தீர்ப்பா இருக்க முடியும். இதுபோல் புல்லுருவிகள் இன்னும் பல கோடி இந்தியாவில் உண்டு கொழுத்து கொண்டு இருக்கு. . துரோக கூட்டம்.. ஈனப்பிறவிகள்..


V RAMASWAMY
அக் 18, 2024 07:14

இம்மாதிரி தாயநாட்டுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு, அவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களானாலும் இந்த வரவேற்கத்தகுந்த தண்டனை கொடுக்க மத்திய அரசு உத்தரவிடவேண்டும்.


சிவா அரவங்காடு நீலகிரி
அக் 18, 2024 07:12

சூப்பர் .


subramanian
அக் 18, 2024 07:10

ஒரு சில நீதிபதிகள் நல்ல தீர்ப்பு , உத்தரவு கொடுக்கின்றனர் .


Lion Drsekar
அக் 18, 2024 07:04

இதற்க்கு பதிலாக அவரை அவர் விருப்பட்ட நாட்டுக்கு அனுப்புவதே சிறந்தது, இப்படி செய்தால் அவருக்கு இன்னமும் வெறிதான் அதிகமாகும், இங்குதான் சிறுவயதில் இருந்தே தீவிரவாதம், மொழி, ஜாதி, மத வெறியை தூண்டுவதற்கு ஒவ்வொரு அமைப்பும் செயல்பட்டு வருகிறது , அவர்கள் யாரை எதிர்க்கிறார்களோ அவர்களை இருந்தோ அழிக்க பல இயக்கங்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சிபீடத்திலும் அமர்கிறார்கள், இப்படி இருக்க வணக்கம் செய்தால்?? இது ஏதோ ஒரு சாராருக்கு மட்டும் பொருந்தாது, எல்லா வெறியர்களுக்கு பொருந்தும், செய்ய மறந்தது நாட்டுப்பற்று ,மற்றும் மனித நேயத்தில் கல்வியில் இருந்து நீக்கியது, வந்தே மாதரம்


Duruvesan
அக் 18, 2024 06:58

ஆக நம்ம பெரிய நீதி கோச்சிக்குவாரு


Sathyanarayanan Sathyasekaren
அக் 18, 2024 06:01

தேவை இல்லாத தீர்ப்பு, இதனால் மூளை சலவை செய்யப்பட்ட இவன் மாறுவான் என்ற நம்பிக்கை கிடையாது. இவனை ஒரு வருடன் பாக்கிஸ்தான் பலூச்சிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் எல்லையில் வசிக்கவேண்டும் என்ற தண்டனை தான் பொருந்தும், இங்கே சுகமாக இருக்கும் மூளைச்சலவை செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் பாக்கிஸ்தான் சென்று சோத்துக்கு அலைந்தால் தான் ஹிந்துக்களின் ஹிந்துஸ்தானின் அருமை புரியும்.


Kasimani Baskaran
அக் 18, 2024 05:19

பள்ளிகளிலேயே தேசப்பற்று சொல்லிக்கொடுக்கப்பட வேண்டும். அப்படி சொல்லிக்கொடுக்க முடியவில்லை என்றால் பின்னாளில் அதுகள் திராவிடர்கள் போல தான் ஒரு தனி இனம் என்ற கற்பனையில் மிதந்து நாட்டை அவமதித்துக்கொண்டுதான் இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை