UPDATED : ஏப் 17, 2025 06:55 PM | ADDED : ஏப் 17, 2025 01:45 PM
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் நக்சலைட்டுகள் 22 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வெடிபொருட்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. பிஜாப்பூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய சோதனையில் நக்சலைட்டுகள் 22 பேர் கைது செய்யப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=niobcgl8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டெக்மெட்லா கிராமத்திலுள்ள வனப்பகுதியில் 7 பேரும், பெல்சார் கிராமத்தில் 6 பேரும், கண்டாகர்கா கிராமத்தில் 9 பேரும் என மொத்தம் நக்சலைட்டுகள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்து உள்ளனர். கைது செய்யப்பட்ட நக்சல்களிடமிருந்து துண்டுப்பிரசுரங்கள், வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் 19 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.