உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களுக்கு பணம் கொடுத்ததாக 22 இடங்களில் ரெய்டு

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களுக்கு பணம் கொடுத்ததாக 22 இடங்களில் ரெய்டு

மும்பை: ஜெய்ஷ் - -இ - முகமது பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி வழங்கியது தொடர்பாக, டில்லி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில், 22 இடங்களில், தேசிய புலனாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, பலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு, ஜெய்ஷ் --- இ - முகமது. கடந்த 2019ல் ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில், இந்த அமைப்பினர் நடத்திய பயங்கர தாக்குதலில், நம் ராணுவ வீரர்கள் 46 பேர் கொல்லப்பட்டனர். ஜம்மு - காஷ்மீரில், 1989க்குப் பின் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இது. புல்வாமா தாக்குதலுக்கு தாங்களே காரணம் என, இந்த அமைப்பும் பொறுப்பேற்றது.

விசாரணை

இந்நிலையில், இம்மாதம் 2ம் தேதி, இந்த அமைப்பின் பெயரில், ராஜஸ்தானில் உள்ள எட்டு ரயில் நிலையங்களுக்கு கடிதம் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், ராஜஸ்தானின் கங்காநகர் உட்பட எட்டு ரயில் நிலையங்களில், அக்டோபர் 30ல் குண்டுகள் வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேநேரத்தில், இந்த அமைப்பின் பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்தது தொடர்பான வழக்கை, தேசிய புலனாய்வு நிறுவனமான, என்.ஐ.ஏ., விசாரித்து வருகிறது. விசாரணையின் ஒரு பகுதியாக, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம், மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், அசாம் மற்றும் டில்லியில், 22 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

சோதனை

மஹாராஷ்டிராவில் என்.ஐ.ஏ., அதிகாரிகளுடன் இணைந்து, அம்மாநில பயங்கரவாத தடுப்பு படையினரும், பல பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆறு பேர் என்.ஐ.ஏ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதேபோல, சோதனை நடந்த மற்ற பகுதிகளிலும், பலர் கைதாகி உள்ளனர். அனைவரிடமும், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தனரா, பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பில் இருந்தனரா என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது. பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ஒரு பகுதியாகவே நேற்றைய சோதனை நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

RAMAKRISHNAN NATESAN
அக் 06, 2024 08:27

புல்வாமா விசாரணை இன்னும் நடக்குதா ???? அப்போ தீவிரவாதிகளா பார்த்து இரக்கப்பட்டு குண்டு வைக்காம இருந்தாத்தான் எங்க நாளும் பொழுதும் ஓடும்போல இருக்குது .....


S.L.Narasimman
அக் 06, 2024 07:32

இப்படி தீவிரவாதிகளை கூட்டம் கூட்டமாக கைதி செய்தால் சிறைகள் போதாது. தண்ட பராமரிப்பு செலவுதான் அதிகமாகும்.


Ramesh
அக் 06, 2024 07:20

எல்லாம் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு தான். பாரத மக்கள் தன தலையில் மண் அள்ளி போடுவதற்கு தயாராகி வருகிறார்கள். இதற்க்கு பாராளுமன்ற தேர்தல் முடிவும் ஜம்மு காஸ்மீர் மற்றும் ஹரியானா தேர்தல் முடிவுகளும் சான்று. மீண்டும் ஒரு முறை காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தால் நாம் முஸ்லிம்களுக்கு அடிமையாவது உறுதி.


Kasimani Baskaran
அக் 06, 2024 07:05

இளைய சமுதாயத்தை கெடுத்து குட்டிச்சுவராக்கும் போதை வஸ்துக்களை கடத்திதான் இப்பொழுது பணம் பரிமாறிக் கொள்கிறார்கள். அதை தடுத்தாலே தீவிரவாதம் பெருமளவில் குறைந்து விடும்.


Kasimani Baskaran
அக் 06, 2024 06:54

எதிர்க்கட்சித்தலைவர் தீவிரமாக அந்தத்தரப்பை தூண்டிவிடும் வேலையில் மூழ்கிக்கிடக்கிறார். அவரை விசாரித்தால் பணம் வரும் வழியை தெளிவாக சொல்லி விடுவார்.


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 06, 2024 06:35

புதுசா கூறு சீவிய கடத்திய எடுத்துட்டு லேசா உடம்பில் கீறிவிட்டேங்கன்னா வீணாப்போன ஆட்களுக்கு சற்று உரைக்கும் உண்மைய கக்குவானுங்க. யாரு இவங்களுக்கு துட்டு கொடுத்து இந்தியாவின் அமைதியை கெடுப்பது என்று சொல்லுவார்கள். காலை உடைத்து மாவுக்கட்டுபோட்டு அழகு பார்க்கவேண்டும் எதிரிநாட்டு செல்லக்குட்டிகளை ...இப்படிக்கு கொசுத்தொல்லை நாராயண் துப்பு கொடுத்துள்ளார்.. அவரை மனதார பாராட்டுவோம், அமைதியை எவனொருவன் சோதிக்கிறானோ அவனுக்கு வேட்டு வாணவேடிக்கை வைப்போம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை