மேலும் செய்திகள்
இந்தியாவுடன் வலுவான உறவு; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி
32 minutes ago
ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் நாராயண்பூரில் நக்சல் அமைப்பைச் சேர்ந்த 28 பேர் ஆயுத நடவடிக்கையை கைவிட்டு,விட்டு, சரண் அடைந்துள்ளனர். 'அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள், நக்சல்கள் இல்லாத தேசமாக நாட்டை உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது' என, பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அறிவித்ததை அடுத்து, மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சல்களுக்கு எதிரான வேட்டை தீவிரம் அடைந்துள்ளது.சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் இன்று (நவ., 25)நக்சல் அமைப்பைச் சேர்ந்த 28 பேர் ஆயுத நடவடிக்கையை கைவிட்டு,விட்டு, சரண் அடைந்துள்ளனர். அவர்களில் 22 பேர் தலைக்கு ரூ.89 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து போலீசார் கூறியதாவது: இந்த ஆண்டு மட்டும் இதுவரை மொத்தம் நக்சலைட்டுகள் 287 பேர் சரணடைந்து இருக்கின்றனர். கடந்த 23 மாதங்களில் சத்தீஸ்கரில், நக்சல் அமைப்பின் தலைவன் உட்பட நக்சலைட்டுகள் 2200 பேர் சரணடைந்துள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
32 minutes ago