உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஈரானில் ஆபரேஷன் சிந்து; டில்லி திரும்பிய 292 இந்தியர்கள்

ஈரானில் ஆபரேஷன் சிந்து; டில்லி திரும்பிய 292 இந்தியர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டில்லி: ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் முக்கிய கட்டமாக, ஈரானில் சிக்கி தவித்த 292 இந்தியர்கள் இன்று அதிகாலை பத்திரமாக டில்லி அழைத்து வரப்பட்டனர்.ஈரான், இஸ்ரேல் போர் எதிரொலியாக அந்நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து ஆபரேஷன் சிந்து நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது. அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2thda7uu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வகையில் ஈரானின் மஷாஹத்தில் சிக்கி தவித்த 292 இந்தியர்கள் இன்று அதிகாலை 3.30 மணியளவில் டில்லி விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரும் சிறப்பு விமானம் மூலம், ஈரானில் இருந்து பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரப்பட்டனர்.விமான நிலையம் வந்த அவர்கள், மத்திய அரசின் மீட்பு நடவடிக்கைக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொண்டனர். இந்த விவரத்தை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தற்போது வரை மொத்தம் 2,295 இந்தியர்கள் மிகவும் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் அவர் தமது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

M S RAGHUNATHAN
ஜூன் 24, 2025 14:51

நமது குன்றிய அரசு டெஹெரானுக்கு பேருந்து அனுப்பி இந்திய குடிமக்களை மீட்டு வந்ததற்கு அந்த மக்கள் நன்றி கூறினார்கள். மற்ற மாநில முதல்வர்களும் நம் முதல்வரின் துணிவான நடவடிக்கையை பாராட்டி உள்ளனர். இதற்கு என்ன பட்டம் கொடுக்கலாம் என்று வைரமுத்து திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர். இந்த பேருந்துகளை நம் துணை முதல்வர் ஓட்டி வந்தார் என்பது குறிப்பிட வேண்டிய தகவல்.


Godfather_Senior
ஜூன் 24, 2025 14:02

Now, keep on an on these evacuees and their future actions. What for they went there, what of trainings they got in Iran that is not available in India and who sponsored their expenses. Very suspicious of large number of only specific religion entering there


Ramesh Sargam
ஜூன் 24, 2025 12:16

மத்திய அரசுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்: ஆபரேஷன் சிந்து போல, தமிழகத்தில் ஒரு ஆபரேஷன் ஹிந்து என்று ஒன்று நடத்தி தமிழகத்தில் இந்த திருட்டு திமுகவினருடன் சிக்கித்தவிக்கும் ஹிந்துக்களை மீட்கவும். நன்றி.


சமீபத்திய செய்தி