உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்காவிலிருந்து மேலும் 295 இந்தியர்கள் விரைவில் நாடு திரும்புகின்றனர்

அமெரிக்காவிலிருந்து மேலும் 295 இந்தியர்கள் விரைவில் நாடு திரும்புகின்றனர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : 'அமெரிக்காவில் இருந்து மேலும் 295 இந்தியர்கள் விரைவில் நாடு திரும்ப உள்ளனர். பிப்., 5ல் பஞ்சாபில் தரையிறங்கிய விமானத்தில், குறிப்பாக, பெண்களின் கை, கால்கள் விலங்கிடப்பட்டது தொடர்பாக, அமெரிக்க அரசிடம் தன் கவலைகளை மத்திய அரசு வலுவாக பதிவு செய்தது' என, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.அமெரிக்க அதிபராக, ஜன., 20ல் பதவியேற்ற குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப், அந்நாட்டில் சட்ட விரோதமாக குடியேறிய வெளிநாட்டினரை அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டார். இதன்படி பிப்ரவரியில், அமெரிக்காவில் இருந்து மூன்று கட்டங்களாக, 388 இந்தியர்கள் நம் நாட்டுக்கு வந்தனர்.முதற்கட்டமாக, பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க ராணுவ விமானத்தில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரின் கை, கால்கள் விலங்கிடப்பட்டிருந்தன. இதற்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது.இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, ராஜ்யசபாவில், மார்க்.கம்யூ., - எம்.பி., ஜான் பிரிட்டாஸ் எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவு அமைச்சகம் நேற்று அளித்த பதில்:அமிர்தசரஸ் விமான நிலையத்தில் பிப்., 5ல் தரையிறங்கிய அமெரிக்க விமானத்தில், பெண்கள், குழந்தைகளின் கை, கால்கள் விலங்கிடப்பட்ட சம்பவம் குறித்து, அமெரிக்க அரசிடம் தன் கவலைகளை மத்திய அரசு வலுவாக பதிவு செய்தது. இதன் எதிரொலியாக, பிப்., 15, 16ல் தரையிறங்கிய விமானங்களில், பெண்கள், குழந்தைகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.இதுவரை, 388 இந்தியர்கள் நாடு திரும்பி உள்ளனர். அவர்களில் 40 சதவீதம் பேர் பஞ்சாபையும், 34 சதவீதம் பேர் ஹரியானாவையும் சேர்ந்தவர்கள். அடுத்த கட்டமாக, அமெரிக்காவில் இருந்து, மேலும் 295 இந்தியர்கள் விரைவில் நாடு திரும்ப உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

pmnr pmnr
மார் 22, 2025 20:08

SUPER


venugopal s
மார் 22, 2025 10:35

நாடு திரும்புகின்றனர் என்று கூறுவது தவறு, நாடு கடத்தப்படுகின்றனர் என்பது தான் உண்மை!


Srinivasan Krishnamoorthy
மார் 22, 2025 10:27

what respect fo these illegal immigrants deserve. they went to US without legal visa.


Palanivelu Kandasamy
மார் 22, 2025 07:51

"அமெரிக்க ராணுவ விமானத்தில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரின் கை, கால்கள் விலங்கிடப்பட்டிருந்தன. இதற்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது."- எப்போது? மனசுக்குள்ளேயா?


naranam
மார் 22, 2025 07:25

சட்ட விரோதமாக அமெரிக்காவில் தங்கி இருந்தவர்கள், திருப்பி அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்று தானே குறிப்பிடவேண்டும்?


பாமரன்
மார் 22, 2025 07:19

என்னமா கம்பி கட்றாங்க மியாவ் மியாவ்... ஃபர்ஸ்ட் மத்திய அரசு கண்டனம் தெரிவிச்சதா போட்டுட்டு... அப்புறம் ட்ரம்ப் மாம்ஸ் கும்மாங்குத்து குத்துனா என்ன பன்றதுன்னு கவலை தெரிவித்ததா போடுறாங்க மியாவ் மியாவ்... இந்த கஸ்மாலங்க நாடு திரூம்புகின்றனராம்ல... எந்த போரிலிருந்தாம்...?? அது சரி இந்தியாவுக்கு சம்பந்தமில்லாத வெளிநாட்டில் பிறந்து வளர்ந்து பீஃப் தின்னுட்டு வாடிகன் அடிமையை கன்னாலம் கட்டிகின சுனிதா வில்லியம்ஸ இந்திய மகளேன்னு சொல்லி மெடல் குத்திக்கிட்ட பெரதமரு கெடச்ச பாக்யசாலிங்க தானே நாமெல்லாம்.... ஆனாலும் டெய்லிபூவின் இந்த பம்மல் ரிப்போர்ட்டங் எங்க பெரிய ஜி பம்முவதை கூட ஓவர் டேக் பண்ணிடும் போல மியாவ் மியாவ்... ஆனால் ஒன்னு மட்டும் கடீசி வரை சொல்லலை... அதாவது அந்த மேன்மை மிகு விருந்தினர்கள் எப்படி வர போறாங்கன்னு....‌இந்த தபா அமிரிக்காகாரண் முழிச்சிண்ட்டுட்டன்... மிலிட்டரி ப்ளேன்ல அனுப்ப மாட்டான்... எப்படி வந்தாலும் எதிரி கட்சியின் ஆட்சியில் இருக்கும் மாநிலத்தில் லேண்ட் ஆக சொல்வோம்ல... என்ன பகோடாஸ் எல்லாத்துக்கும் காரணம் காங் நேரு அவுரங்கசீப் டீம்கா தானே...?? ஸ்வாஹா...


Kasimani Baskaran
மார் 22, 2025 07:01

வருவோரின் பட்டியலில் காலிஸ்தானி எவனாவது இருந்தால் கண்டிப்பாக கால் கை கட்டப்பட்ட நிலையிலேயே பயணிக்க வேண்டிவரும்.


Appa V
மார் 22, 2025 06:48

வெளியேற்றப்படுகிறார்கள் என்று சொல்லுவது தானே சரி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை