உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோஹோரி கேட்டில் 3 பேருக்கு தீக்காயம்

லோஹோரி கேட்டில் 3 பேருக்கு தீக்காயம்

புதுடில்லி:லோஹோரி கேட், பார்ஷ் கானா ஷ்ரதானந்த் மார்க்கில் ஒரு வீட்டில் நேற்று முன் தினம் அதிகாலை 3:30 மணிக்கு தீப்பற்றியது. ஐந்து வண்டிகளில் அந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி 4:50 மணிக்கு தீயை அணைத்தனர்.அந்த வீட்டில் வசித்த, அனஸ் என்ற சிறுவனுக்கு 50 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டு இருந்தது. அதேபோல, நபி அகமது,18, ஷாநவாஸ்,30, ஆகியோரும் 45 சதவீத தீக்காயத்துக்கு ஆளாகினர். மூவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.கட்டடத்தின் தரை தளத்தில், 15 மின்சார மீட்டர்களில் மின்கசிவு ஏற்பட்டு, அவை பொருத்தப்பட்டு இருந்த பலகையில் தீப்பற்றியுள்ளது. அதன் அருகே நிறுத்தி வைத்திருந்த பைக்கும் எரிந்து சாம்பலானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ