உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 31 கோடி பெண்கள் ஓட்டளிப்பு: கைதட்டி வாழ்த்து தெரிவித்த தேர்தல் கமிஷனர்கள்

31 கோடி பெண்கள் ஓட்டளிப்பு: கைதட்டி வாழ்த்து தெரிவித்த தேர்தல் கமிஷனர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் 31.20 கோடி பெண்கள் ஓட்டளித்து உலக சாதனை படைத்துள்ளனர். ஓட்டளித்த பெண் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தேர்தல் கமிஷனர்கள் அனைவரும் எழுந்து நின்றி கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். நாளை (ஜூன் 04) ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், டில்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ராஜிவ் குமார் கூறியதாவது: 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஓட்டுப்பதிவில் 64.20 கோடி வாக்காளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் பெண் வாக்காளர் 31.20 கோடி பேர். அதிக பெண்கள் ஓட்டளித்து உலக சாதனை படைத்துள்ளனர்.

1.75 மடங்கு அதிகம்

தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்துள்ளது. ஜி7 நாடுகளின் ஓட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை விட, இந்தியாவில் ஓட்டளித்தவர்கள் எண்ணிக்கை 1.75 மடங்கு அதிகம். 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் ஓட்டளித்துள்ளனர். தேர்தல் கமிஷன் கடும் சவால்களை சந்தித்து தேர்தலை நடத்தி உள்ளது. சிலர் தேர்தல் கமிஷனை விமர்சிப்பது சரியா?. வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல் நடந்துள்ளது.

10 அம்ச ஏற்பாடுகள்

ஓட்டு எண்ணிக்கைக்கு 10 அம்ச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு துவங்கிய நேரத்தையும் முடிந்த நேரத்தையும் கட்டுப்பாட்டு இயந்திரத்தில் சரிபார்க்கும்படி அறிவுறுத்தியுள்ளோம். ஓட்டு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளோம். ஒவ்வொரு ஓட்டு இயந்திரத்தையும் தனி அடையாள எண் மற்றும் சீல்களை சரிபார்க்கும்படி அறிவுறுத்தியுள்ளோம்.ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் சிசிடிவி கேமராக்கள் உள்ளது. ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவான ஓட்டுகளை எண்ணும் முன்பு, மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கையை பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நக்சலைட் மற்றும் வன்முறை நிறைந்த பகுதிகளில் கூட அதிக அளவில் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

பாராட்டு

ஓட்டளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக தேர்தல் கமிஷனர்கள் அனைவரும் எழுந்து நின்றி கைத்தட்டி பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

M Ramachandran
ஜூன் 03, 2024 19:20

நீங்கள் எண்ணமோ இப்படி அறிக்கையயை கொடுக்குறீர்கள் ஆனால் ஒரு ஜால்றா தட்டும் பழைய நைந்த கருப்பு கோட்டு கும்பல் யாருக்காகவோ புலம்பி அழுது கொண்டிருக்கு


Easwar Kamal
ஜூன் 03, 2024 18:50

மக்கள் தங்கள் கடமை சரியாக செய்துள்ளனர் ஆனால் நீங்கள் உங்கள் கடமை சரியாக செய்து உள்ளார்களா? சேஷனுக்கு பிறகு தேர்தல் கமிஷன் என்று உள்ளதா என்று நீங்கள் சொன்னதுக்கு பிறகுதான் தெரிகிறது. மக்களை ஏமாற்றினால் இயற்கை அது வேலை காட்டும்.


கனோஜ் ஆங்ரே
ஜூன் 03, 2024 18:19

மக்கள் தங்கள் கடமையை செய்ததுக்கு கைதட்டுறது கேலிக்கூத்தா இல்ல.. அப்படி பார்த்தா... பொறந்த குழந்தைக்கு, அக்குழந்தையின் தாய், பால் கொடுத்ததுக்கு அக்குழந்தை கை தட்டி பாராட்டணும்.சொல்வது போலிருக்கு...


Sankar Ramu
ஜூன் 03, 2024 16:57

வாழ்த்துக்கள் இன்னும் அதிக மக்கள் ஓட்டு போட வரனும்.


குமரி குருவி
ஜூன் 03, 2024 14:19

பின் தங்கிய ஆண்கள் முன்னேற சலுகைகள் தரலாமே..


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை