உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 10 ஆண்டுகளில் அமைக்கப்பட்ட ரயில் பாதை 31,000 கி.மீ.,: ஜெர்மனியின் மொத்த ரயில் பாதையை விட அதிகம்

10 ஆண்டுகளில் அமைக்கப்பட்ட ரயில் பாதை 31,000 கி.மீ.,: ஜெர்மனியின் மொத்த ரயில் பாதையை விட அதிகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ''கடந்த, 10 ஆண்டுகளில், புதிதாக, 31,000 கி.மீ., துாரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டில் மட்டும், 5,300 கி.மீ., துாரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. இது மிகப்பெரிய ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் ஒட்டுமொத்த ரயில் பாதையை விட அதிக துாரம்,'' என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.'விக் ஷித் பாரத்' எனப்படும் வளர்ந்த இந்தியா திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் துாதர்களாக நியமிக்கப்பட்டோரின் கூட்டம், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடந்தது. அதில், பா.ஜ., மூத்த தலைவரும், ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே துறையில் மேற் கொள்ளப்பட்ட பணிகள் குறித்து விளக்கினார்.

நாட்டின் வளர்ச்சி

அப்போது அவர் கூறியதாவது: ரயில்வே துறை பால் சுரக்கும் பசுவாகவே முந்தைய ஆட்சிகளில் பார்க்கப்பட்டு வந்தது.ஆனால், ரயில்வே துறையில் ஒட்டுமொத்தமாக சீர்திருத்த மேம்பாடுகள் செய்து, அதன் வாயிலாக நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்யும் திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டது.கடந்த, 10 ஆண்டுகளில், ரயில்வேயில் பல புதிய திட்டங்களுடன், முந்தைய திட்டங்களை வேகப்படுத்துவது, விரிவு படுத்துவது, நவீனமயமாக்குவது போன்றவை மேற்கொள்ளப்பட்டன.தற்போது நாளொன்றுக்கு, 4 கி.மீ., துாரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும், 5,300 கி.மீ., துாரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. இது, ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள மொத்த ரயில் பாதையைவிட அதிகமாகும்.கடந்த, 10 ஆண்டு களில், 31,000 கி.மீ., துாரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. இது, மிகப்பெரிய ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் ஒட்டுமொத்த ரயில் பாதையைவிட அதிகமாகும்.கடந்த, 10 ஆண்டுகளில், 44,000 கி.மீ., துார ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டது. அதே நேரத்தில், காங்கிரஸ் தலைமையிலான 6-0 ஆண்டு கால ஆட்சியில், 20,000 கி.மீ., துாரத்துக்கே மின்மயமாக்கப்பட்டது. விரைவில் மின்மயமாக்குவதில், 100 சதவீதத்தை எட்ட உள்ளோம்.

'வந்தே மெட்ரோ'

மீட்டர் கேஜ் பாதைகளை, அகலப் பாதையாக்கும் பணிகளை, 1950 - 1960களிலேயே துவங்கியிருக்க வேண்டும். ஆனால் ரயில்வேயை தொடர்ந்து புறக்கணித்து வந்து உள்ளனர்.இந்த திட்டங்களுடன், ரயில் நிலையங்களை புதுப்பிப்பது, உள்நாட்டிலேயே ரயில் பெட்டிகள் தயாரிப்பது ஆகியவற்றுக்கு மோடி அரசு முக்கியத்துவம் தருகிறது.தற்போது, 300 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. 'வந்தே பாரத், புல்லட் ரயில்' என, அதிகவேக ரயில் சேவைகள் சாத்தியமாகியுள்ளன. மஹாராஷ்டிரா - குஜராத் இடையேயான புல்லட் ரயில் சேவையைப் போல, எட்டு நகரங்களுக்கு இடையேயான சேவையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.வந்தே பாரத் ரயில்களின் வெற்றியைத் தொடர்ந்து, இரு நகரங்களை இணைக்கும் 'வந்தே மெட்ரோ' சேவை, புதிய ஆட்சியின், முதல் 100 நாட்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம், இதைத் தவிர, 500 கி.மீ., துாரத்துக்கு உள்ள நகரங்களை இணைக்கும் 'வந்தே சேர் கார்', அதற்கு மேற்பட்ட தொலைவுள்ள நகரங்கள் இடையே, 'வந்தே ஸ்லீப்பர்' சேவை துவக்க உள்ளோம்.கம்ப்யூட்டர் உட்பட மின்னணு இயந்திரங்களுக்கு தேவையான, 'செமி கண்டக்டர்' தயாரிப்பில் உலகின் மையமாக இந்தியா விளங்க உள்ளது.மொபைல்போன் தயாரிப்பிலும் முன்னிலையில் உள்ளோம். கடந்த, 10 ஆண்டுக்கு முன், 98 சதவீத மொபைல்போன்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால், தற்போது, 99 சதவீத மொபைல்போன்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

gowri
மே 19, 2024 14:20

இந்தியாவின் மொத்த இரயில் பாதைகள் டிராக் நீளம் கிம், இது வெள்ளைக்காரன் போட்டது, இப்ப நீங்க என்ன சொல்ல வாரிங்க இந்தியாவின் மொத்த இரயில் பாதையின் நீளம் கிம் பல்ல நீளம் ஆகிவிட்டது என்று சொல்ல வருகிறீர்களா, பொய் சொல்லலாம் ஆனால் ஏக்கர் கணக்குல சொல்லக் கூடாது, பொய்


அப்புசாமி
மே 19, 2024 11:43

ஒரு கொரமாண்டல் எக்ஸிப்ரஸ் ரயில் விபத்தில் செத்தவங்க ஜெர்மனியில் கடந்த 20 வருடங்களில் செத்தவங்ஜளை விட அதிகம். சேத்து மெடல் குத்திக்கோங்க.


அசோகன்
மே 19, 2024 09:12

மத்திய அரசு தமிழ்நாட்டு போக்குவரத்தையும் எடுத்தால் அழியும் நிலையில் இருந்து தப்பிக்கும்... இரண்டு திராவிட கட்சிகளுள் கொள்ளை அடித்தது போக மீதி ஓட்டை பேருந்துகளே மிச்சம்... இதில் கடன் பல ஆயிரம் கோடிகள்... இதுதாண்ட திராவிட மாடல்


Sampath Kumar
மே 19, 2024 09:02

பாதையை போட்ட போதுமா? பயனிக்க ஆளு வேண்டாமா?


hari
மே 19, 2024 09:49

ஆமாம் எங்களுக்கு ஓசி பஸ் போதும்... அப்படித்தானே சம்பத்து


indi
மே 19, 2024 08:44

Stalin and INDI alliance leaders includes Mamta, Sonia, Kejriwal, will not open their mouth for this great achievement


முருகன்
மே 19, 2024 07:38

ஜெர்மனி மக்கள் தொகை எவ்வளவு நம்முடைய மக்கள் தொகை எவ்வளவு ஒப்பிடுவது என்றால் மக்கள் தொகை அதிகம் உள்ள சீனா உடன் செய்தால் நன்றாக நமது நிலை மக்களுக்கு புரியும்


indian railways
மே 19, 2024 08:45

யோவ் முட்டு, 2004-2014 ல எவ்ளோ கிலோ மீட்டர் போட்டாங்கன்னு சொல்லு. வந்துட்டான் முட்டு குடுக்க


Dharmavaan
மே 19, 2024 07:25

இதையெல்லாம் திருட்டு இந்தி கூட்டணி சொல்லாது வெளியே


Stalin
மே 19, 2024 06:38

We are proud to be Indians. The greatest achievement was due to effective administration by Central Government under the leadership of Shri Narendrs Modi, Prime Minister of India.


Kasimani Baskaran
மே 19, 2024 06:37

பத்தாண்டுகளில் போடப்பட்ட இருப்புப்பாதை மற்றும் சாலைகள் இந்தியாவில் வளர்ச்சியை துரிதப்படுத்தி இருக்கிறது இது இன்னும் தொடர வேண்டும்


A1Suresh
மே 19, 2024 01:48

நானும் ஜெர்மனியில் தான் வசிக்கிறேன் இங்கே சாலைகளில் சரக்கு லாரிகள் மிகமிக அதிகம் ஆனால் நமது பாரதத்தில் பிரத்யேக சரக்கு போக்குவரத்து என்று தனி ரயில்வழி அமைத்தீர்கள் இதனால் சாலை போக்குவரத்து நெரிசல், விபத்து குறைகிறது மக்கள் பிரயாண ரயில்கள் தாமதமின்றி செல்லும் அதிகம் ரயில்களும் விட முடியும் வாழ்க பல்லாண்டு ஜி


மேலும் செய்திகள்





புதிய வீடியோ