உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "அரசியலமைப்பு சட்டம் குறித்து பேச காங்கிரசுக்கு உரிமை இல்லை": பிரதமர் மோடி

"அரசியலமைப்பு சட்டம் குறித்து பேச காங்கிரசுக்கு உரிமை இல்லை": பிரதமர் மோடி

புதுடில்லி: 'அரசியலமைப்பு சட்டம் மீது தங்களது அன்பை வெளிப்படுத்த காங்கிரசுக்கு உரிமை இல்லை' என பிரதமர் மோடி கூறினார்.1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி தான் இந்தியாவில் முதல் முறையாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவு: எமர்ஜென்சியை எதிர்த்த அனைத்து மாமனிதர்களுக்கும், பெண்களுக்கும் மரியாதை செலுத்தும் நாள் இன்று. காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்திய, எமர்ஜென்சி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எப்படி அவர்கள் அடியோடு தகர்த்தனர் என்பதை நினைவூட்டுகிறது.

கூட்டாட்சி

எமர்ஜென்சியை விதித்தவர்களுக்கு நமது அரசியலமைப்பு சட்டம் மீது தங்களது அன்பை வெளிப்படுத்த காங்கிரசுக்கு உரிமை இல்லை.கூட்டாட்சி முறையை அழித்தவர்கள் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் விதிமுறைகளை மீறியவர்கள் இவர்கள் தான்.எமர்ஜென்சியை அமுல்படுத்துவதற்கு வழிவகுத்த மனநிலை அவர்களின் கட்சியினரிடையே உயிர்ப்புடன் இருக்கிறது.

சித்திரவதை

ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக, அப்போதைய காங்கிரஸ் அரசு ஜனநாயகக் கொள்கையை புறக்கணித்தது. காங்கிரஸ் கட்சிக்கு அடிபணியாதவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். நலிந்த பிரிவினரை குறிவைத்து சமூக ரீதியாக பிற்போக்குத்தனமான கொள்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பாரத மாதா கண்ணீர் வடித்த நாள்

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள பதிவு: 50 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூன் 25, 1975 அன்று இந்த கருப்பு தினத்தில், அரசியலமைப்பை தூக்கியெறிந்தும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கியும், ஊடகங்களின் வாயைக் கட்டியும், நீதித்துறையை அடக்கிய சர்வாதிகாரியின் காலடியிலும் நமது ஜனநாயகம் எவ்வாறு நசுக்கப்பட்டது என்பதை தேசம் அதிர்ச்சியுடனும் திகிலுடனும் நினைத்துப் பார்க்கிறது. ஆயுதமேந்திய ராணுவத்தினர் எங்கள் விடுதிக்குள் புகுந்து, விடுதி அறைகளை உதைத்து திறந்து, ரைபிள் துப்பாக்கியின் பின்பக்கத்தால் தாக்கி, புத்தகங்கள், உடைகளை கூட எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் எங்களை உடனடியாக வெளியேற்றிய நாளை நானும் எனது பல்கலைக்கழக நண்பர்களும் எப்படி மறக்க முடியும்?.சொந்தப் பிள்ளைகளாலேயே முதுகில் குத்தப்பட்டு பாரத மாதா கண்ணீர் வடித்த நாள் அது. நமது தேசிய வரலாற்றின் இந்த கருப்பு அத்தியாயத்தை யாரும் நினைத்துக்கூட பார்க்காத வகையில் நமது தாய்நாட்டின் கண்ணியத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான உறுதியுடன் இந்த நாளில் துக்கம் அனுசரிப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Meiyazhagan Vadivel
ஜூன் 26, 2024 17:22

தீவிர வாதத்தை அடக்க, அதற்கு ஆதரவு அளித்த ஆதரவாளர்கள், அமைப்புகளை நாட்டின் பாதுகாப்பு கருதி ஒடுக்கவே உள்நாட்டு பாதுகாப்பு பராமரிப்பிற்கான பிரகடனம் மிசா அன்றைய ஒன்றிய தலைமை அமைச்சர் திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் துணிச்சலாக நடவடிக்கை எடுத்தார். உள் நாட்டிற்கு அச்சுறுத்தல் என்றால் பாதுகாக்க வேண்டிய கடமை அவருக்கு, அரசியல் அமைப்பு சட்டப்படி, அன்று எடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உட்பட்டு இருந்து. காங்கிரஸுக்கு அருகதை இல்லை என எவ்வாறு தற்போதைய தலைமை அமைச்சரால் விமர்சிக்க முடியும். இன்று தலைமை அமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு அரசியல் பேசுவது நாட்டிற்கு உந்தது இல்லை.


Alagusundram KULASEKARAN
ஜூன் 25, 2024 17:34

காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் வெளிநாட்டில் இருந்து வந்தது இந்திய குடிமகனை மணந்தவர்கள் இந்துக்கள் பூர்வீக குடிகளாகவும் மற்ற மதத்தை சேர்ந்தவர்களுக்கு வதிவிட உரிமை மட்டும் வழங்க வேண்டும் அரசியல் தொழில் செய்ய அனுமதிக்க கூடாது


Mohan
ஜூன் 25, 2024 14:21

ஊழல் வாதிகள் மீது கரிசனம் காட்டியதால் இனிமேல் அவுங்க ஆட்டம் அதிகமா தான் இருக்கும் ...நல்ல அனுபவிங்க...என்ன செஞ்சு என்ன பிரயோசனம் உங்களால அவர்களை ஒன்றும் செய்ய இயலவில்லை முழு பெரும்பான்யா இருக்கும் போதே இனி எங்க நடவடிக்கை எடுக்க போரீங்க ...


ஆரூர் ரங்
ஜூன் 25, 2024 15:28

என்னத்த எதிர்பார்க்கிறீர்கள்?


s sambath kumar
ஜூன் 25, 2024 13:23

இன்னிக்கு ஒரு திமுக கயவனும் காங்கிரஸ் களவாணிபயலும் வாயை திறக்கமாட்டானுங்க . நாளை முதல் உளறல் அதிகமா இருக்கும். எமெர்ஜென்சி நினைவு நாள். அதான் பயம்.


M Ramachandran
ஜூன் 25, 2024 12:53

ஆம் ஆம் இன்னும் காதில் ஒளித்து கொண்டிருக்கிறது ஐயோ அம்மா கொல்ராங்களே அலரல் சத்தம்


GMM
ஜூன் 25, 2024 12:45

பிறர் உரிமை, அரசின் உரிமையை சட்டம் மீறி எடுத்து செயல் படுத்துவது காங்கிரஸ். கொடுக்கப்பட்ட அதிகாரம் மீறி செயல் பட்டது இந்திரா காங்கிரஸ். நெருக்கடிநிலை தேவையில்லை. ஊழல் இல்லை என்றால் சட்ட ஒழுங்கு மிக எளிது. நெருக்கடிக்கு பின் தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் காங்கிரஸ் கட்சியை தடை செய்து இருக்க வேண்டும். அரசியல் அமைப்பில் பிறர் உரிமை முடக்கும் சரத்துகள் மாற்ற வேண்டும்.


Saai Sundharamurthy AVK
ஜூன் 25, 2024 12:31

அடிக்கடி தான் மிசாவில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டேன் என்று ஒருவர் சொல்லிக் கொண்டிருப்பார். அவரைக் கேளுங்கள் காங்கிரஸின் எமர்ஜென்சி காலம் எப்படிப் பட்டது என்று !!!


Indian
ஜூன் 25, 2024 11:56

காங்கிரஸ் கு முழு உரிமை உண்டு ..


Swaminathan L
ஜூன் 25, 2024 11:54

காலம், தொடர் சூழல் மற்றும் சமூக முன்னெடுப்புகளுக்கேற்ப அத்யாவசியமான சட்டத் திருத்தங்கள் மற்றும் புதிய சட்டங்களைக் கொண்டு வர வேண்டியது ஆளும் அரசின் அடிப்படைக் கடமையாகும். தேச இறையாண்மைக்கு பங்கம் நேராது வகையில் அது நிகழ வேண்டும். மற்றபடி, இண்டி கூட்டணிக் கட்சிகள் தனியாகவும், ஒன்றாகவும் தாங்கள் மட்டுமே இறையாண்மையைக் காப்பதாக அரசியல் பேச்சுகளை வெளியிடுவது, தங்களின் அரசியல் இருப்புக்கு சான்றாக மட்டுமே அமையும். பொறுப்புள்ள எதிர்கட்சிகளாக அவை பாராளுமன்ற அவைகளில் தங்களின் பங்களிப்பைச் செய்தாலே போதும். கூச்சல் போட்டு, பதாகைகளைத் தூக்கியபடி சபாநாயகர் இருக்கையைச் சூழ்ந்து அமளி செய்வது, உருப்படியான வாதங்கள் நிகழாமல் அவை நேரத்தை வீணடிப்பது என்று இண்டி கூட்டணி செய்யாமல் இருந்தாலே நாட்டுக்கு நலம்.


அப்புசாமி
ஜூன் 25, 2024 11:46

விவரமோ, புரிதலோ இல்லாம பேசுறாரு. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் XVIII வது பிரிவின் கீழ் ஆர்டிக்கிள் 352 முதல் 360 வரை எமர்ஜென்சிக்கான சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்பை உத்தேசித்து அவசரநிலை பிரகடனம் செய்ய பிரதமருக்கு அதிகாரம் உண்டு. அன்றைய நாட்டு நடப்பு இவருக்கு தெரியாது. இவரது ஆட்சியில் காஷ்மீர் முதல்வர்களை வீட்டுச் சிறையில் மாசக்கணக்கில் அடைத்து வைத்ததே மினி எமர்ஜென்சிதான். இவுரு senjsaa நாட்டின்.பாதுகாப்பு, தேஷ்பக்க்தின்னு பூ சுத்துவாங்க.


ஆரூர் ரங்
ஜூன் 25, 2024 12:08

அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாத அவசரநிலைப் பிரகடனம் செல்லாத ஒன்று. அதில் அப்போது ஜனாதிபதி பக்ருதீன் கையெழுத்திட்டது வெட்கக்கேடு. நீங்கள் குறிபிட்ட ஷரத்துகள் பின்னர் ஜனதா ஆட்சிக் காலத்தில் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி பிரதமர் தன்னிச்சையாக உள்நாட்டு அவசரநிலையை பிறப்பிக்க முடியாது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை