| ADDED : மார் 04, 2024 04:44 PM
புதுடில்லி: பொய்யான வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்து வருகிறது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.மத்திய பிரதேசத்தில் உனா மாவட்டத்தில் வரும் லோக்சபா தேர்தல் குறித்து, பா.ஜ.,வினருடன் அனுராக் தாக்கூர் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் வரும் தேர்தலில் மத்திய பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெறுவது தொடர்பாக விவாதித்தார்.பின்னர் அனுராக் தாக்கூர் நிருபர்களிடம் கூறியதாவது: பொய்யான வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்து வருகிறது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால், காங்கிரஸ் தலைவர்கள் பொதுமக்களை சந்திக்கும் போது, உங்கள் வாக்குறுதி என்ன ஆனது? என கேட்கின்றனர். பொய்யான வாக்குறுதிகள் காங்கிரசுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஹிமாச்சல பிரதேசத்தில் மட்டுமல்ல, கர்நாடகாவிலும் காங்கிரஸ் சிக்கலில் தவித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.