உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சி": பிரதமர் மோடி விளாசல்

"நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சி": பிரதமர் மோடி விளாசல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: 'குடியுரிமை திருத்தச்சட்டம் குறித்து பொய்களை பரப்பி, நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி முயற்சி செய்தன' என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.உத்தரபிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j5g51fxw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக இந்தியா வந்துள்ளவர்களுக்கு குடியுரிமை வழங்கும் பணி துவங்கிவிட்டது. இவர்கள் நாட்டில் நீண்ட காலமாக அகதிகளாக வாழ்ந்து பாதிக்கப்பட்டவர்கள். அதே நேரத்தில், எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியும், காங்கிரசும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பொய்களைப் பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயன்றன.

நம்பிக்கை

எனது உத்தரவாதத்தின் மீது இந்திய மக்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை உலகமே கண்காணித்து வருகிறது. இண்டியா கூட்டணியினர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அகற்றுவோம் எனக் கூறி வருகின்றனர். இதை யாராலும் அகற்ற முடியாது. அவர்கள் ஒரு ஏமாற்றுக்காரர்கள். அண்டை நாடுகளில் வாழும் சிறுபான்மையினர் இந்தியாவுக்கு வருமாறு மகாத்மா காந்தியே கூறியுள்ளார்.

நாட்டை பிரிக்க முயற்சி

கடந்த 70 ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களின் கலாசாரம் மற்றும் மதத்தைப் பாதுகாக்க இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்கள் காங்கிரசின் ஓட்டு வங்கியாக இல்லாததால், அவர்களைப் பற்றி காங்கிரஸ் கவலைப்படவில்லை. மதத்தின் அடிப்படையில் நாட்டை காங்கிரஸ் பிரிக்க முயற்சி செய்கிறது. அகதிகளை காங்கிரஸ் புறக்கணிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
மே 17, 2024 07:26

என்ன இருந்தாலும் உங்கள் அளவுக்கு அவர்களுக்கு இந்த விஷயத்தில் அனுபவம் இல்லை என்பது வாஸ்தவம் தான்!


Syed ghouse basha
மே 16, 2024 21:39

உங்களை பிரதமர் ஆக தேர்வு செய்தது நம் இந்திய மக்கள் செய்த வரலாற்று பிழை என்ன செய்வது மதம் பெரிதாகிபோனதே


Lion Drsekar
மே 16, 2024 15:00

மக்களுக்காக எதிர்க்கட்சி என்ற போர்வை மற்றபடி எல்லா நிலைகளிலும் எல்லா கட்சிகளும் ஒன்றுதான் குறுநிலமாக இருந்தாலும் மாமன்னர்களாக இருந்தாலும் தங்களுக்கு பதவி கிடைக்கும் வரை நாட்டைப்பற்றியோ அல்லது மக்களைப்பற்றிய சிந்தனையோ எதுவுமே யாருக்குமே இல்லாமல் போனது வருத்தம் அளிக்கிறது எல்லோருக்கும் தேவை பதவி என்றைக்குமே ஊரு இரண்டு பட்டால் மட்டுமே மற்றவர்களுக்கு வாழ்வு இதை இன்று மக்கள் நன்றாக புரிந்து கொடுந்தள்ளனர் எது எப்படி இருந்தாலும் இன்றைக்கு ஒரு முக்கிய பிரமுகர் வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறார் என்றால் , அவர் சென்று அடையும் இடம் வரை பாதுகாப்பு, முன்னாலும் பின்னாலும் தனியார் வாகனங்கள் அனுமதி இல்லை இவைகளுக்கெல்லாம் காரணம் சுதந்திர போராட்ட வீரர்கள் அவர்களை நினைத்து மக்களோடு மக்களாக எளிமையாக வாழ்ந்தால் எந்த ஒரு தீய சக்தியும் எங்குமே கலவரத்தை ஏற்படுத்த முடியாது வந்தே மாதரம்


MADHAVAN
மே 16, 2024 14:23

மதம் மதம், ஹிந்து முஸ்லீம் என்று நாட்டை பிரிப்பது யார் என்பது ஊரறிந்தவிஷயம்


GMM
மே 16, 2024 13:45

நாட்டில் பிரிவினை, கலவரம் ஏற்படுத்த காங்கிரஸ் எப்போதும் முயற்சி காங்கிரஸ் பசும் தோல் போர்த்திய புலி அது புரியாமல் பிஜேபி தேவைக்கு அதிகமாக அரசியல் விளக்கம் கூறி சிக்கி வருகிறது பண மதிப்பு முதல் அனைத்திற்கும் தவறான கருத்தை காங்கிரஸ் கூறி வருகிறது ஒவ்வொரு நடவடிக்கையின் பலனை மக்கள் ஏற்கும் படி பிஜேபி விளக்க வேண்டும்


Indian
மே 16, 2024 13:30

திரு மோடி அவர்களே அது காங்கிரஸ் அல்ல அதன் கூட்டணியில் உள்ள முக்கியமான கூட்டாளிக்கட்சி


முருகன்
மே 16, 2024 13:23

இந்த தேர்தல் எப்போது முடியும் தாங்க முடியவில்லை நேற்று தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த மாதிரி பேசுவது சரியா


மேலும் செய்திகள்



புதிய வீடியோ