உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "இரு மடங்காக உயரப்போகும் விவசாயிகளின் வருமானம்": மத்திய அமைச்சர் சவுகான் பேட்டி

"இரு மடங்காக உயரப்போகும் விவசாயிகளின் வருமானம்": மத்திய அமைச்சர் சவுகான் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க, பிரதமர் மோடி தொடந்து வேலை செய்து வருகிறார்' என மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், ஊரக மேம்பாடு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இன்று அவர் தனது அலுவலகத்தில் கணபதி பூஜை நடத்தினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r555qa0l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

மகிழ்ச்சி

பின்னர் அவர் கூறியதாவது: பிரதமர் மோடியின் எண்ணங்களை நிறைவேற்ற அதிகாரிகளுடன் இணைந்து பாடுபடுவோம். விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் மோடி நேற்று எடுத்த முடிவு எனக்கு மகிழ்ச்சியை தந்தது. விவசாயிகளின் சம்மான் நிதி மீண்டும் வழங்கப்பட உள்ளது. மோடி எண்ணத்தை தே.ஜ., கூட்டணி அரசு செய்து முடிக்கும்.

வருமானம்

பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு விவசாயிகளின் நலனுக்காக அனைத்து பணிகளையும் செய்யும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க, பிரதமர் மோடி தொடந்து வேலை செய்து வருகிறார். விவசாயிகளின் நலனுக்காக எடுக்கப்படும் எந்த முயற்சிக்கும், நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Vathsan
ஜூன் 11, 2024 18:29

இரு மடங்கு செலவு வைக்காமல் இருங்கள் அது போதும். சும்மா வாய் இருக்குதுன்னு ஏதாவது பேசவேண்டியது.


Ramanujadasan
ஜூன் 11, 2024 16:17

நதி நீர் இணைப்பு மிக முக்கியம் , இந்தியாவின் அணைத்து நதிகளும் ஒன்றிணைக்க பட வேண்டும் . காலத்தின் கட்டாயம்


SANKAR
ஜூன் 11, 2024 16:15

same stated in 2014.did not happen till 2024


A Venkatachalam
ஜூன் 11, 2024 15:38

ஐயா உங்க காலத்திலாவது நதிகளை இணைக்க முயற்சி செய்தால் நல்லது. நீர் ஆதாரமின்றி விவசாயத்தை பெருக்க முடியாது.


ஆரூர் ரங்
ஜூன் 11, 2024 15:03

தானியங்களின் ஆதார விலையைக் கூட்டுவது மட்டுமே தீர்வல்ல. நீர்ப்பாசன வசதியை அதிகரித்தபின் பலர் அதிக நீர்த் தேவைப்படும் கோதுமை நெல் கரும்பு சாகுபடிக்கு மாறி துன்பப்படும் நிலை. பக்க விளைவாக சிறு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது. நூறு நாள் வேலைத்திட்டம் கூலித் தொழிலாளர்கள் கிடைக்காமலடித்து விட்டது. ஆக உண்மையான வருமான வளர்ச்சி கால்நடை வளர்ப்பு, மதிப்புக்கூட்டு பொருட்களை உற்பத்தி செய்தல் போன்றவை மூலம் மட்டுமே சாத்தியமாகும்.


மேலும் செய்திகள்