உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதிர்ப்பு அரசியலில் இருந்து வெளியே வாங்க...ஒன்னா உழைப்போம்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

எதிர்ப்பு அரசியலில் இருந்து வெளியே வாங்க...ஒன்னா உழைப்போம்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''எதிர்ப்பு அரசியலில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளியே வர வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாம் அனைவரும் கட்சி வித்தியாசங்களை கடந்து நாட்டுக்காக உழைக்க வேண்டும்'' என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜூலை 22) துவங்குகிறது. நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்னதாக பார்லி., வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பார்லி.,யின் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். ஆக்கப்பூர்வமான கூட்டத்தொடர் நடைபெற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வளர்ச்சிக்கான பாதையில்..

பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்க்கிறது. '2047ல் வளர்ந்த பாரதம்' என்ற இலக்கை அடையும் நோக்கில் அமுத காலத்தை உருவாக்குவதற்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. முன்னேறிய பொருளாதாரம் கண்ட நாடுகளை விட இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது. நாங்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும். வளர்ச்சிக்கான பாதையில் நாடு தொடர்ந்து நடைபோடும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் முக்கியத்துவம் வாய்ந்த தருணம் இது.

ஒற்றுமை

மக்களின் நலன் கருதி அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டும். 2029ல் தேர்தல் நடக்கும் போது அரசியல் நகர்வுகளை நிகழ்த்தலாம். தற்போது மக்கள் நலனே முக்கியம். தேர்தலில் பிரசாரம், போட்டியிட்ட நிகழ்வு எல்லாம் முடிந்து விட்டது; இனி ஒற்றுமையாக செயல்பட வேண்டும். எதிர்ப்பு அரசியலில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளியே வர வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாம் அனைவரும் நாட்டுக்காக ஒருங்கிணைந்து போராட வேண்டும். கட்சி வித்தியாசங்களை கடந்து அனைவரும் நாட்டுக்காக உழைக்க வேண்டும்.

தோல்வியால் மனக்கசப்பு

தங்களது ஏமாற்றதால் சிலர் பார்லி., நேரத்தை வீணடிக்கின்றனர். பார்லி.,யில் அரசியல் தொடர்பான பேச்சுகளை தேர்தலின்போது வைத்துக்கொள்ளலாம். அரசின் குரலை நசுக்குவது ஜனநாயகத்திற்கு எதிரான செயல். ஏமாற்றம் காரணமாக எல்லா விவகாரங்களிலும் எதிர்மறையான கருத்துகளை தெரிவிப்பது சரியல்ல. தோல்வியால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பார்லி.,யின் நேரத்தை எதிர்க்கட்சிகள் வீணடிக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Barakat Ali
ஜூலை 22, 2024 20:04

ஒவ்வொரு கூட்டத்தொடருக்கு முன்பும் பிரதமரோ, சபாநாயகரோ, பாதுகாப்புத்துறை அமைச்சரோ சபையை அமைதியாகவும், பயனுள்ள வகையிலும் நடத்த ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் .... அச்செய்தி பத்திரிகைகளில் வந்தவண்ணம் உள்ளது .....


Rengaraj
ஜூலை 22, 2024 16:41

கேட்டு கேட்டு பாப்போம் , கேட்கலைன்னா பட்ஜெட் தொடர் முழுவதும் சஸ்பெண்ட், , எங்க வேலைய நாங்க பார்ப்போம், உங்க வேலைய நீங்க பாருங்க சமீபத்திய தமிழ்நாடு சட்டசபை தொடர் முன்மாதிரியா இருக்கு.


Rajarajan
ஜூலை 22, 2024 16:18

என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிப்புட்டீரு ?? ஒண்ணா சேர்ந்தா அதுக்கு பெயர் அரசியல் இல்லையே ?? சரி சரி. அடுத்த ஐந்து வருடத்தில், நஷ்டத்தில் இயங்கும் / தேவையற்ற பொத்துறை எத்தனை நிறுவனங்களை இழுத்து மூட போறீங்க ??


Pandi Muni
ஜூலை 22, 2024 16:12

மக்களுக்காக உழைப்போம் என்பது நகைப்பிற்குரியது


ஆரூர் ரங்
ஜூலை 22, 2024 13:48

இது போல பலமுறை நிருபர்களை சந்தித்து விட்டார். ஆனாலும் ஊடகங்களை தவிர்க்கிறார் என்று உ.பி ஸ் வருந்துகிறான்.


Mario
ஜூலை 22, 2024 13:04

நீங்க ஒழுக்கமா ஆட்சி செய்யுங்க பார்ப்போம்


Jysenn
ஜூலை 22, 2024 12:58

Has started waving the white flag. The real BJP supporters are being taken for a jolting ride.


venugopal s
ஜூலை 22, 2024 12:56

பாராளுமன்றத்தில் மெஜாரிட்டி இருந்த பத்து வருடங்கள் எங்கே போய் இருந்தது இந்த நல்ல புத்தி?


Thirumal s S
ஜூலை 22, 2024 12:37

அப்படியா


S Regurathi Pandian
ஜூலை 22, 2024 12:30

என்ன திடீரென இப்படி சொல்லிவிட்டார்?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை