உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போராடாவிட்டால் இந்தியா பாகிஸ்தானாக மாறிவிடும்: மத்திய அமைச்சரின் பேச்சுக்கு காங்., கண்டனம்

போராடாவிட்டால் இந்தியா பாகிஸ்தானாக மாறிவிடும்: மத்திய அமைச்சரின் பேச்சுக்கு காங்., கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: முஸ்லிம் இடஒதுக்கீட்டை எதிர்த்து ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடாவிட்டால், இந்தியா பாகிஸ்தானாக மாறிவிடும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார். இதற்கு காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ''முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவது ஹிந்துக்கள் மீதான தாக்குதல். ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முஸ்லிம் இடஒதுக்கீட்டை எதிர்த்துப் போராடாவிட்டால், வரும் நாட்களில் இந்தியா பாகிஸ்தானாக மாறிவிடும்'' எனக் கூறியிருந்தார்.இதற்கு காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: உண்மையில், சோகமான விஷயம் என்னவெனில், பிரிவினையின் பிம்பத்தை பா.ஜ., பிரதிபலிப்பதன் விளைவாக தான் இந்தியா, பாகிஸ்தானாக மாறிவருகிறது. இந்தியாவின் முன்னேற்றத்தில் அனைவரும் உள்ளடக்கி இருப்பதையே நாங்கள் பார்க்க விரும்புகிறோம். அப்படியிருக்கையில், இந்தியா, பாகிஸ்தானாக மாறும் என மத்திய அமைச்சர் பேசுவது நியாயமில்லை. அவரின் பேச்சு பாகிஸ்தானின் பிம்பத்தை பிரதிபலிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Raa
மே 27, 2024 12:28

சாதாரணமாக அனைவரிடத்தும் போட்டி போடவேண்டியதுதானே... இதில் மத இடஒதுக்கீடு எதுக்கு?


Giridharan Srinivasan
மே 25, 2024 15:44

உண்மையில் பிரிவினையை காங்கிரஸ் ஏற்கனவே ஏற்படுத்திவிட்டதை சசிதரூர் மறைக்கப்பார்க்கிறார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது என்ற உண்மையை சசிதரூர் மறக்கக் கூடாது. ஜெய் ஹிந்த்


karthik
மே 25, 2024 12:42

பிஜேபி யை விட்டால் பாரதத்தை பாதுகாக்க முடியாது.. இதுவரை குறுக்கு வழியில் மத அரசியல் செய்த காங்கிரஸ் இன்று வெளிப்படையாக வேறு வழி இல்லாமல் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு என்று மத அரசியலில் உச்சத்திற்கு வந்து நிற்கிறது..


ஆரூர் ரங்
மே 25, 2024 09:15

இப்போ INDI கூட்டணிக் கட்சிகள் SC, OBC களின் வேலைவாய்ப்புகளைப் பிடுங்கி முஸ்லிம்களுக்கு அளிக்க முயற்சிக்கின்றன.


Kasimani Baskaran
மே 24, 2024 21:45

தேவையற்ற பேச்சு. மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்தின் படி செல்லாது. அப்படி மத அடிப்படையில் இட ஒதுக்கீடு தருவோம் என்பது நீட்டை நீக்குவோம் என்று சொல்வது போலத்தான்.


விஜய் ஐயர்
மே 24, 2024 21:24

கண்டிப்பா பாகிஸ்தானா மாறிடும்


kulandai kannan
மே 24, 2024 21:22

தமிழ்நாட்டிலும் BC Muslim என்று இட ஒதுக்கீடு கருணாநிதி கொணர்ந்தார். இந்து அமைப்புகள் இதையெல்லாம் தட்டிக் கேட்பதில்லை.


GMM
மே 24, 2024 20:40

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு ஆபத்து. அரசியல் சாசனத்தில் இல்லை? நீதிமன்றம் ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை? இஸ்லாம் மதத்தின் சில தலைவர்கள் பிறர் இஸ்லாமியராக இருக்க வேண்டும் அல்லது இஸ்லாமியர் கீழ் வசிக்க வேண்டும் என்று தொடர்ந்து போதித்து வருவதால் அச்சம் நிலவுகிறது.? தன் மதத்தை சார்ந்தவர் செய்த குற்றத்தை அரசிடம் சொல்வது இல்லை. மறைந்து வாழ உதவி? இது பிற சமூகத்தில் குற்ற பரம்பரை என்று கருதப்படுகிறது. பல ஆண்டுகளாக நிகழ்ந்த வரலாறு போதும். சர்வாதிகார, ராணுவ வீரர்கள் பலம் மிகுந்த சீனா எதிர்காலத்தில் ஆதிக்கம் வளர்ந்து விடும் என்று அஞ்சி, சிறை பிடிக்கிறது. ஆபத்தை விளைவிக்கும் சட்டம் பற்றி, நீதிமன்றம் அமைதி தான் போராட்ட எண்ணம் வளர்கிறது.? இஸ்லாமியர் ஒன்று பட்டு வாழ்ந்தால் பலர் ஏற்பர். பெரும்பாலும் மதம் மாறியவர்கள். மதத்தில் அதிக ஈடுபாடு கொள்ள மாற்ற படுகின்றனர்.


sankaranarayanan
மே 24, 2024 20:36

சசிதரூர் இதுபோன்று பாகிஸ்தானில் இந்துக்களுக்கு சலுகைகள் கொடுக்க ஏற்பாடு செய்வாரா? இந்தியா என்ன இளைச்ச நாடா? நாட்டை பிரிவினை படுத்தியதும் போதாதென்று இங்கே இடஇவர்களுக்கு இடஒதுக்கிவிடும் வேண்டுமா இதற்கு இவர்கள் ஓட்டுக்காக ஆதரவா?


பேசும் தமிழன்
மே 24, 2024 19:36

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது என்று அரசியல் அமைப்பில் இருக்கும் போது.... கான் கிராஸ் கட்சி முஸ்லீம்களுக்கு... மத அடிப்படையில் இட ஒதுக்கீடு எப்படி வழங்கலாம் ??? அது சட்டத்துக்கு எதிரான செயல் தானே ????


மேலும் செய்திகள்







புதிய வீடியோ