உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "நான் அதிர்ஷ்டசாலி": ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி பேட்டி

"நான் அதிர்ஷ்டசாலி": ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி: ‛‛நான் இப்போது உலகின் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்'' என ராமர் சிலையை வடிவமைத்த கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை எனப்படும் புனித நிகழ்வு இன்று (ஜன.,22) நடந்தது. பிரதமர் மோடி ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து வந்தார். ராமர் சிலையானது கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் என்பவரால் வடிவமைக்கப்பட்டதாகும்.

அதிர்ஷ்டசாலி

இந்நிலையில், ராமர் சிலையை வடிவமைத்த சிற்பியான அருண் யோகிராஜ் கூறியிருப்பதாவது: ‛‛ நான் இப்போது உலகின் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். எனது முன்னோர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ராமர் ஆகியோரின் ஆசி எனக்கு எப்போதும் உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

PERUVAI SARATHI
ஜன 23, 2024 19:06

உலகில் எத்தனையோ கோடிக்கண சிற்பிகள் இருக்கிறார்கள். அத்தனை கோடிகளில் ஒரே ஒரு நபருக்கு "திரு அருண் யோகிராஜ்" போன்று ஏனையோருக்கு பகவானின் அருள் கிட்டுமா? யோசித்துப் பார்க்கவேண்டும். சிலை வடிப்பதும், விற்பதும் எங்கெங்கும் நடக்கிறது. ஆனால் ஒருவர் செதுக்கும்/வடிக்கும் அச்சிலை உலகப் பிரசித்தி பெறுமாறு ஓரிடத்தில் பிரதிஷ்டை ஆகி, இனி வரப்போகின்ற பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அந்தச் சிற்பியின் பெயர் நிலைத்து நீடிக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்கும் போது, நினைத்தே பார்க்க முடியாதவாறு மகிழ்ச்சி தோன்றுகிறது. இத்தனை பெரிய சிற்பி, ஒரே ஒரு வரியில் மிகவும் சுருக்கமாக "நான் இப்போது உலகின் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்" என அடக்கமாகப் பதில் சொல்லியிருக்கிறார். இவரது புகழ் இராமன் அருளால் உலகம் உள்ளவரை எப்போதும் உச்சஸ்தானத்திலே இருக்கும் என்பதில் ஐயமில்லை. அன்புடன் பெருவை கி. பார்த்தசாரதி


JAGADEESANRAJAMANI
ஜன 23, 2024 11:46

அற்புதமாக வடிவமைக்கப்பட்ட குழந்தை ராமர் புன்னகை புரியும் தெய்வம் .ஜெய் ஸ்ரீராம்.


Narayanan
ஜன 23, 2024 10:39

சாத்தியமான வார்த்தை. ராமரின் அனுகிரகம் நன்றாகவே இருக்கிறது. சிலை அமைப்பு அருமை. நீவிர் பல்லாண்டு வாழ்க. உங்கள் குடும்பமும் வளமாக இருக்க ராமபிரான் அருளட்டும்


beindian
ஜன 23, 2024 09:44

மனிதனை படைத்த கடவுளை உருவாக்கிய மனிதன் அப்போ யார் கடவுள் விடை சொல்லுங்கப்பா முதலில்


ram
ஜன 23, 2024 12:17

கத்தார் அரசாங்கத்தில் கேட்கவும்


beindian
ஜன 23, 2024 16:34

ஏன் பதிலில்லையா? இல்லை பதிலே தெரியாதா?


venugopal s
ஜன 23, 2024 07:29

ராமர் சிலை அப்படி ஒன்றும் ஆஹா ஓஹோ என்று சொல்லும்படி இல்லை, மிகச் சாதாரணமாக இருக்கிறது என்று தான் எனக்கு தோன்றுகிறது!


Muralidharan raghavan
ஜன 23, 2024 10:30

ரசனை இல்லாதவர்களின் கமெண்ட் இது. அதுவும் புனை பெயரில் கருத்து சொல்பவர்களை கண்டு கொள்ள வேண்டியதில்லை


Ramesh Sargam
ஜன 23, 2024 06:20

அந்த சிலையை வடிவமைத்ததால் நீங்கள் பாக்கியசாலி. அதை பார்க்க, தரிசனம் செய்ய எங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததால் நாங்கள் மிக மிக பாக்கியசாலி. ஜெய் ஸ்ரீ ராம்.


அருண் குமார்
ஜன 23, 2024 00:37

தங்களுக்கு கிடைத்த பாக்கியம்


Sivagiri
ஜன 22, 2024 22:44

ஓம் - விராட் விஸ்வகர்ம பரப்ரம்ஹனே நமஹ . .


vnatarajan
ஜன 22, 2024 22:24

கடவுள் உன்னை படைத்தான். நீயோ அந்த ராமர் கடவுளையே படைத்துவிட்டாய். இதற்கு முன் எந்தந்த கோயிலுக்கு சிலைகள் செதுக்கியிருக்கார் என்று சொல்லவில்லையே .சிலையின் கண்களை நன்றாக ஊர்ந்து கவனித்தால் இடது கண் விழியைவிட வலது கண் விழி சிறுது பெரிதாக இருப்பதுபோல் தோன்றுகிறது.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 22, 2024 21:47

அயோத்தி இருக்கும் வரை இவர் பெயர் நிலைத்திருக்கும். ஜென்ம சாபல்யம் அடைந்துவிட்டார். அவருள் இருக்கும் பிரம்மாவின் அருள்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி