உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கும் பாக்.: சசிதரூர் குற்றச்சாட்டு

பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கும் பாக்.: சசிதரூர் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களுக்கு பாகிஸ்தான் வெகுமதி அளித்து வருகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் குற்றம்சாட்டி உள்ளார். பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்த அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடனை அமெரிக்கா ராணுவம் சுட்டுக் கொன்றது. அவர் குறித்து தகவல் தெரிவித்ததாக டாக்டர் ஷாகில் அப்ரிதியை பாகிஸ்தான் அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அங்கு அவர் சித்ரவதை செய்யப்படுவதாகவும், உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க எம்.பி., பிராட் ஷெர்மன் கூறியுள்ளார்.இது தொடர்பாக சசி தரூர் கூறியதாவது: அமெரிக்க எம்.பி. பிராட் ஷெர்மன் கருத்து வரவேற்கத்தக்கது. ராணுவ அலுவலகம் அருகே பாதுகாப்பாக வாழ்ந்த பயங்கரவாதி ஒசாமாபின்லாடனுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்ததுடன், அவர் குறித்து தைரியமாக தகவல் தெரிவித்த டாக்டரை கைது செய்து தண்டனை வழங்கி உள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை ஆதரித்தால் அவர்களுக்கு வெகுமதி கிடைக்கும். அவர்களை காட்டிக் கொடுத்தால் தண்டனை கிடைக்கும். இவ்வாறு சசி தரூர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Naga Subramanian
ஜூன் 08, 2025 22:05

Sasi Tharoor - "A Right Person in a Wrong Place"


Ramesh Sargam
ஜூன் 08, 2025 20:03

பயங்கரவாதிகளை ஆதரிக்கும் காங்கிரஸ் கட்சியினர். அதில் சசி தரூர் போன்ற ஒரு சிலரை தவிர்த்து எல்லோரும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இன்றைக்கும் ஆதரவு தருகிறார்கள். அவர்கள் அனைவரும் கூண்டோடு பாகிஸ்தான் அனுப்பப்படவேண்டும்.


புதிய வீடியோ