உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "இந்தியாவும், மாலத்தீவும் இணைந்து செயல்படணும்": ஜெய்சங்கர் விருப்பம்

"இந்தியாவும், மாலத்தீவும் இணைந்து செயல்படணும்": ஜெய்சங்கர் விருப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'இந்தியாவும், மாலத்தீவும் நெருக்கமாக இணைந்து செயல்படுவதை எதிர்நோக்குகிறோம்' என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மாலத்தீவில் இருந்து இந்திய வீரா்களை திரும்பப் பெறுமாறு, சீன ஆதரவாளரான அந்த நாட்டின் புதிய அதிபா் முகமது மூயிஸ் இந்திய அரசிடம் அறிவுறுத்தினார். இதனால், இருநாடுகளுக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டது. ஆனால் மோடியின் பதவியேற்பு விழாவில், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு பங்கேற்றார். அதுமட்டுமின்றி, அவர் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றதை பெருமையாக கருதுகிறேன் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில், டில்லியில் இன்று (ஜூன் 10) மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். இந்த புகைப்படத்தை எக்ஸ் சமூகவலைதளத்தில் ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை இன்று டில்லியில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவும் மாலத்தீவும் நெருக்கமாக இணைந்து செயல்படுவதை எதிர்நோக்குகிறோம். இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

நிக்கோல்தாம்சன்
ஜூன் 10, 2024 16:11

வழக்கம்போல யார் முதிகிலாவது குத்தும் வழக்கத்தை இந்த முறை சீனாவிடம் செய்து காண்பியுங்க பாப்போம்


Kasimani Baskaran
ஜூன் 10, 2024 15:34

நாடுகளுக்கு சுற்றுலாப்பயணிகளை அனுப்பி வாழ்வு கொடுப்பது அபத்தம். ஆகவே இந்தியாவும் சுற்றுலாத்துறையில் கவனம் செலுத்தி உள்நாட்டு பயணிகள் மாலத்தீவுகளுக்கு செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


Lion Drsekar
ஜூன் 10, 2024 13:16

பாராட்டுக்கள், உலக நாடுகள் மற்றும் உலக நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவழியினர் எல்லோருமே இந்தியா மீது அன்பும் பாசமும் மரியாதையும் தேசப்பற்றும் கொண்டவர்கள் . இங்கு நமக்கேன் வம்பு , எதுவுமே நடக்கப்போவது இல்லை, வந்தே மாதரம்


மேலும் செய்திகள்