உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3 ஆண்டில் நக்சலைட் தாக்குதல் முற்றிலும் ஒழிக்கப்படும்: அமித்ஷா பேச்சு

3 ஆண்டில் நக்சலைட் தாக்குதல் முற்றிலும் ஒழிக்கப்படும்: அமித்ஷா பேச்சு

கவுஹாத்தி: ''பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில் அடுத்த 3 ஆண்டுகளில் நக்சலைட் தாக்குதல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். அசாம் மாநிலம் தேஜ்பூரில் நடந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: கடந்த 9 ஆண்டுகளில், எல்லை பாதுகாப்பு படையினர் நலனுக்காக பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். நட்பு நாடுகளான நேபாளம் மற்றும் பூட்டானின் எல்லையைப் பாதுகாப்பதோடு, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் பீஹார் ஆகிய மாநிலங்களில் நக்சலைட் தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில், சி.ஆர்.பி.எப், பி.எஸ்.எப், போலீசார் ஆகியோர் ஒன்றிணைந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடி வருகின்றனர். இவர்களின் துணிச்சல்கள் பற்றி நக்சல் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யும் போது தெரிகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில் அடுத்த 3 ஆண்டுகளில் நக்சலைட் தாக்குதல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை