உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "வாழ்க்கையில் அநீதியை அனுமதித்ததே இல்லை": மம்தா பேச்சு

"வாழ்க்கையில் அநீதியை அனுமதித்ததே இல்லை": மம்தா பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: 'என் வாழ்நாளில் நான் ஒருபோதும் அநீதியை அனுமதித்தது இல்லை' என சட்டசபையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில் தெரிவித்தார். மேற்குவங்கம் மாநிலத்தில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. அங்குள்ள வடக்கு பர்கானாஸ் மாவட்டம் சந்தேஷ்காலி என்ற பகுதியில் ஹிந்து பெண்களை திரிணமுல் காங்., எம்எல்ஏ., ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது உதவியாளர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து சட்டசபையில் மம்தா பானர்ஜி பேசியதாவது: வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் பிரச்னையை பா.ஜ., தூண்டுகிறது. என் வாழ்நாளில் நான் ஒருபோதும் அநீதியை அனுமதித்தது இல்லை. சந்தேஷ்காலி என்ற பகுதியில் பெண்கள் பாலியல் செய்யப்பட்டதாக தகவல் வந்ததும், மாநில மகளிர் ஆணையத்தின் பிரதிநிதிகளை உடனடியாக அனுப்பினேன். இந்த சம்பவம் தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் அடங்கிய போலீஸ் குழு வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். அப்பகுதி மக்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி