உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டுச் சீட்டு முறைக்கு திரும்ப முடியாது: தலைமை தேர்தல் கமிஷனர் உறுதி

ஓட்டுச் சீட்டு முறைக்கு திரும்ப முடியாது: தலைமை தேர்தல் கமிஷனர் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மின்னணு ஓட்டு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது எனக்கூறியுள்ள தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார், மீண்டும் ஓட்டுச்சீட்டு முறைக்கு திரும்ப முடியாது எனக்கூறியுள்ளார்.மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, ' இண்டியா' கூட்டணி கட்சிகள், மின்னணு ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டின. மீண்டும் ஓட்டுச் சீட்டு முறைக்கு மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர். ஆனால், இதனை தேர்தல் கமிஷன் மறுத்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yunflzre&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், டில்லியில் இன்று( ஜன.,07) நிருபர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் கூறியதாவது: இவிஎம் இயந்திரங்களை சேதப்படுத்த முடியும் என்பது ஆதாரமற்றது. அதனை ஹேக் செய்ய முடியாது. முறைகேடு செய்ய முடியும் என்ற குற்றச்சாட்டு முழுமையாக விசாரிக்கப்பட்டு, பொய் என நிராகரிக்கப்பட்டது. இந்த தொழில்நுட்பம் நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல் என்ற கொள்கையை உறுதி செய்கிறது. பல்வேறு தருணங்களில், இவிஎம்.,கள் மீதான நம்பிக்கையை நீதித்துறையும் உறுதி செய்துள்ளது. இந்த இயந்திரங்கள், தொழில்நுட்ப புரட்சியை பிரதிபலிப்பதுடன், தேசத்தின் பெருமைக்கு உரிய விஷயம் ஆக விளங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Senthoora
ஜன 08, 2025 04:32

மோடி இருக்கும் வரை முடியாது தான்.


veera
ஜன 08, 2025 10:58

இந்தியாவில் அறிவுள்ளவர்கள் இருக்கும் வரை இருக்கும்....நீ சிட்னியில் இட்லி, கெட்டி சட்னி தான்


தாமரை மலர்கிறது
ஜன 07, 2025 20:49

கம்ப்யூட்டர் காலத்தின் கட்டாயம். வோட்டிங் மெஷின் இந்திய தேர்தலில் ஜனநாயகத்தின் உயிர்மூச்சாக விளங்குகிறது. இனி கற்காலத்திற்கு செல்ல முடியாது. குகையில் வாழ்ந்து சமைக்கப்படாத மாமிசத்தை உண்டு ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு வாழ்ந்தால் மட்டுமே வோட்டிங் மெஷின் தேவைப்படாது.


Senthoora
ஜன 08, 2025 04:34

ஆமா அது இருந்தால் தானே உங்க ஆள் வெல்லமுடியும்.


GMM
ஜன 07, 2025 20:31

தேர்தல் ஆணையம் அரசியல் சாசனம் அமைப்பு. ஓட்டு சீட்டு, குலுக்கல் முறை என்று யாரும் பாடம் நடத்த அனுமதிக்க கூடாது. தேர்தலை சீர்குலைத்து விடும். இது போல் புள்ளி கூட்டணி, நீதிமன்றம் நடவடிக்கையில் தலையிட முடியாது. மீண்டும் ஓட்டு சீட்டு முறைக்கு திரும்ப முடியாது என்று உறுதியுடன் கூறும் போது, நீங்கள் தலைமை தேர்தல் ஆணையர் என்று நிரூபிக்கிறீர்கள்.


Constitutional Goons
ஜன 07, 2025 17:01

ஓட்டும் தேவையில்லை அரசும் தேவையில்லை, அரசியல் சட்டமும் தேவையில்லை


Nagendran,Erode
ஜன 07, 2025 19:38

அப்படீன்னா நீங்க இங்கிருக்க தேவையில்லை உங்க டொப்பிள் கொடி நாட்டுக்கு போய் விடுங்க அங்குதான் நீங்க கேட்பது கிடைக்கும்.


Sampath Kumar
ஜன 07, 2025 16:28

ஏன் முடியாது மெஷின் கண்டுபிடித்தவனே அதை தூக்கி கடாசி விட்டான் நீக்க ஏன் பிடித்து தொங்குறீரங்க உங்க கூட்டு அம்பலம் ஆகிய விடும் என்றா


ghee
ஜன 07, 2025 16:59

அப்போ அதே மசின்ல காங்கிரஸ், திமுக கெலிச்ச ஓகே வா சொம்பு....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை