உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛‛ராமர் என் கனவில் வந்தார் : லாலு மகனால் பரபரப்பு

‛‛ராமர் என் கனவில் வந்தார் : லாலு மகனால் பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: ‛‛ராம பிரான் என் கனவில் வந்தார், கும்பாபிஷேக விழாவுக்கு வரமாட்டேன் அவர் கூறினார்'' என பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகனும் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்தார்.உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் குழந்தை ராமர் சிலையை கருவறையில் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு வரும் 22ல் நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட 6,000க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இதில் பங்கேற்க பல அரசியல் தலைவர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டு மக்கள் ராமர் கோயிலுக்கு வருகை புரிய பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.இந்த நிலையில், பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகனும் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ‛‛ஜன.,22ம் தேதி கும்பாபிஷேகத்திற்கு வர வேண்டும் என்பது கட்டாயமா? விழாவை புறக்கணித்த நான்கு சங்கராச்சாரியார்களின் கனவில் ராமர் வந்துள்ளார். அதேபோல், என் கனவிலும் ராம பிரான் தோன்றினார். கும்பாபிஷேக விழாவுக்கு நான் வர மாட்டேன் என்று என்னிடம் கூறினார்.'' எனப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 63 )

DARMHAR/ D.M.Reddy
ஜன 17, 2024 08:58

நல்லா உடுகிறார் உடான்ஸ்


Yaro Oruvan
ஜன 16, 2024 12:26

அவனா நீ ??


P.Sekaran
ஜன 16, 2024 10:37

கனவில் மாடுதேன் வந்திருக்க வேண்டும் தந்தை மாட்டு தீவன ஊழலில் மாட்டிக்கொண்டாரே. சொல்வதே உலரல் வேஷம் வருகின்ற தேர்தலில் தெரிந்து விடும் யார் கனவு உண்மை என்று


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 16, 2024 08:47

ராமருக்கு இது தெரியுமோ ??


பேசும் தமிழன்
ஜன 16, 2024 08:17

நாடகத்தில்... வேடம் போடும் ஆள் போல lவே இருக்கிறார்,... இனியும் உங்கள் நாடகம் மக்களிடம் எடுபடாது.... மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது !!!


Matt P
ஜன 16, 2024 08:13

வில்லும் அம்பும் கொண்டு வந்திருப்பாரே. உங்க அப்பாவை எங்கே என்றும் கேட்டருப்பாரே. என்க அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லியிருப்பியே.


பேசும் தமிழன்
ஜன 16, 2024 08:06

ராமர்... நாட்டு மக்கள் அனைவரது கனவிலும் வந்து.... இந்தி கூட்டணி என்ற பெயரில் போலியாக வரும் ஆட்களுக்கு ஓட்டு போட கூடாது என்று கூறி விட்டார்.... பொய் சொல்லலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்ல கூடாது.


Venkatesh
ஜன 16, 2024 03:10

இவனெல்லாம் ஒரு மனித ஜென்மம்


sankaranarayanan
ஜன 16, 2024 00:48

''அழைப்பிதழ் வழங்க இவர்கள் யார்? ஒட்டுமொத்த காங்கிரசும் அயோத்திக்கு அழைப்பின்றி செல்லும் என்பது மிகவும் வரவேற்கத்தக்கற்றது இதில் அரசியலே செய்ய வேண்டாம் கூப்பிட்டாலும் வரமாட்டேன் என்பார்கள் கூப்பிடாவிட்டால் கூப்பிடவில்லைனு என்பார்கள் தர்ம சங்கடந்தான் இத்தாலியில் சர்ச் துவக்கம் என்றால் எல்லாரும் சேர்ந்தே செல்வார்கள்


Ramesh Sargam
ஜன 16, 2024 00:18

ஆளைப்பார்த்தாலே ஏதோ இரவுகொள்ளைக்காரன் போல தெரிகிறான்.


Matt P
ஜன 16, 2024 08:14

அரசியலில் இருப்பவர்கள் பகல் கொள்ளைக்கார்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை