உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.5 கோடி வேணும், புனேயில் வீடும் வேணும்: ஒலிம்பிக் பதக்கம் வென்றவரின் தந்தைக்கு ஆசை!

ரூ.5 கோடி வேணும், புனேயில் வீடும் வேணும்: ஒலிம்பிக் பதக்கம் வென்றவரின் தந்தைக்கு ஆசை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: பாரிஸ் ஒலிம்பிக், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசேலேவின் தந்தை, தனது மகனுக்கு மஹா., அரசு ரூ.2 கோடி பரிசுத் தொகை வழங்கியது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார். தனது மகனுக்கு, ரூ.5 கோடி பரிசுத்தொகை மற்றும் புனேயில் வீடு வாங்கி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.மகாராஷ்டிராவின் கோலாப்பூர் அருகே உள்ள கம்பல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்வப்னில் குசேலே. இவருக்கு வயது 29. இவர், பாரிஸ் ஒலிம்பிக், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார். இவருக்கு மஹா., அரசு ரூ.2 கோடி பரிசுத் தொகை வழங்கி கவுரவித்தது. இந்த தொகை ஏமாற்றம் அளிப்பதாக, குசேலேவின் தந்தை அதிருப்தி தெரிவித்தார். கோலாப்பூரில் நிருபர்களிடம் ஸ்வப்னில் குசேலேவின் தந்தை, சுரேஷ் குசலே கூறியதாவது:ஹரியானா அரசு தனது மாநிலத்தை சேர்ந்தவர்கள் பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால், ஒவ்வொரு வீரருக்கும் ரூ.5 கோடி வழங்குகிறது. மஹாராஷ்டிரா அரசு ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்பவருக்கு ரூ.5 கோடியும், வெள்ளிப் பதக்கம் வெல்பவருக்கு ரூ.3 கோடியும், வெண்கலப் பதக்கம் வெல்பவருக்கு ரூ.2 கோடியும் வழங்குகிறது.ஸ்வப்னில் ஒரு தாழ்மையான பின்னணியைச் சேர்ந்தவர் என்பதால், தொகை குறைவாக இருக்கிறதா? எம்.எல்.ஏ., அல்லது அமைச்சர் மகனாக இருந்திருந்தால் வெகுமதித் தொகை அதிகமாக இருந்திருக்குமோ? மஹா.,வில் விளையாட்டு வளாகத்தில் உள்ள 50 மீட்டர் மூன்று நிலை துப்பாக்கி சுடும் அரங்குக்கு தனது மகனின் பெயரை சூட்ட வேண்டும். ஸ்வப்னிலுக்கு பயிற்சிக்கு எளிதாகச் செல்லும் வகையில் பாலேவாடி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் ஒரு வீடு வாங்கி கொடுக்க வேண்டும். ரூ.5 கோடி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.ஒலிம்பிக் போட்டியில், வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்கலப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, இந்தியாவின் ஸ்வப்னில் குசேலேக்கு இந்திய ரயில்வேயில் இரட்டிப்பு பதவி உயர்வு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Srinivasan Krishnamoorthi
அக் 08, 2024 14:17

கொடுக்கலாம் இருந்தாலும் அது தானாக வந்தால் சரியாக இருக்கும்


Murthy
அக் 08, 2024 13:31

தவறில்லை கொடுக்கலாம் . ..... அரசியல்வாதிகள்போல் இல்லாமல் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் .


Ramesh Sargam
அக் 08, 2024 12:24

பேராசை கூடாது. போதும் என்கிற மனமே பொன்செய்யும் மருந்து என்று அவருக்கு மராட்டிய மொழியில் மொழிபெயர்த்து கூறவும்.


Kasimani Baskaran
அக் 08, 2024 10:47

ஏறாளமான வர்த்தக, விளம்பர வாய்ப்புகள் உண்டு. அதை வைத்தே நிறைய சம்பாதிக்கலாம். அதை விட்டுவிட்டு வரிப்பணத்தில் ஏறாளமாக கேட்பது அல்பத்தனமாக இருக்கிறது


M Selvaraaj Prabu
அக் 08, 2024 10:16

பேராசை பிடித்தவர்கள். சொல்லிய படி, வெண்கல பதக்கம் வென்றவருக்கு 2 கோடி கொடுக்கிறார்கள். இங்கே எங்கே வந்தது தாழ்ந்த இனம் என்கிற விஷயம்?


Rangarajan Cv
அக் 08, 2024 10:07

Greedy


Nandakumar Naidu.
அக் 08, 2024 09:54

இது ரொம்ப ஓவர், இந்த கோரிக்கை அவரின் மதிப்பை இழக்க செய்யும். இவரின் தந்தைக்கு இது புரியவில்லை.


Govinda raju
அக் 08, 2024 09:36

10 பைசா குடுக்க கூடாது 200 க்கும் 300 க்கும் பாம்பாடுபடும் ஜுவன் கள் நிறைய உண்டு உழைப்பவர் உயரனும்


Shekar
அக் 08, 2024 09:31

தாழ்மையான பின்னனி அப்படின்னு இங்கேயும் ஜாதியை கொண்டுவந்துட்டான் பாருங்க. அரசு இவனை உருவாகி செலவுசெய்து ஒலிம்பிக் அனுப்பியுள்ளது. ஒன்னு திங்க தெரியாம தின்னுட்டு அரசை குறை சொல்லுது. இவன் கோடி கோடியா கொட்டலைன்னு அரசை குற்றம் சொல்கிறான்


Lion Drsekar
அக் 08, 2024 09:07

ஒரு இடத்தில பாராட்டினாலும் பேராசை கூடாது, ஒவ்வொரு ஆண்டும் இவர் பங்கு பெறுவார் , பொறுத்தார் பூமி ஆழ்வார் வாழ்த்துக்கள், வந்தே மாதரம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை