உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இதேவேலையா போச்சு: ராகுல் மீது அமித்ஷா காட்டம்

இதேவேலையா போச்சு: ராகுல் மீது அமித்ஷா காட்டம்

புதுடில்லி: நாட்டை பிரிக்கும் சக்திகளுக்கு ஆதரவாக இருப்பதும், தேச விரோத அறிக்கைகளை விடுவதுமே எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மற்றும் காங்கிரசின் வழக்கமாகி விட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.இது குறித்து 'எக்ஸ் ' சமூக வலைதளத்தில் வெளியிட்ட அமித்ஷா வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: நாட்டை பிரிக்கும் சக்திகளுக்கு ஆதரவாக இருப்பதும், தேச விரோத அறிக்கைகளை விடுவதுமே எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மற்றும் காங்கிரசின் வழக்கமாகி விட்டது. தேசிய மாநாடடு கட்சியின் தேச விரோத கொள்கைகளை ஆதரிப்பது, காஷ்மீரில் இட ஒதுக்கீடு குறித்து பிரச்னை எழுப்புவது அல்லது வெளிநாட்டு மண்ணில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பகிர்வது என தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதுடன், நாட்டின் உணர்வுகளையும் ராகுல் புண்படுத்துகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5u5twmxc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிராந்தியவாதம், மதம் மற்றும் மொழி அடிப்படையில் நாட்டில் பிளவு ஏற்படுத்தும் காங்கிரசின் அரசியலை ராகுல் அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது. காங்கிரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையை ராகுல் மீண்டும் வெளிக்காட்டி உள்ளார்.பா.ஜ., இருக்கும் வரை இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியாது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Srinivasan Rajagopal
செப் 12, 2024 12:33

நரேந்திர மோடி ஜி... சீனாவில் பேசியது "முன்பு நீங்கள் இந்தியராக பிறந்ததற்கு அவமானம் அடைந்தீர்கள். இப்போது 2014 நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு பெருமைப்படுகிறீர்கள்". தென் கொரியாவில் நீங்கள் சொன்னது - “கடந்த காலத்தில் என்ன பாவம் செய்தோமோ, இப்போது நாம் இந்தியாவில் வந்து பிறந்திருக்கிறோம்” என மக்கள் வருந்திய காலம் ஒன்று இருந்தது. இதைத்தான் நாடு என்கிறார்கள்.


Sivak
செப் 11, 2024 22:33

வெளிநாட்டுக்கு போனா பையித்தியம் பிடிச்ச குரங்கு மாதிரி ஆயிடுறார் பப்பு


Rasheel
செப் 11, 2024 21:21

பிரதமர் பதிவிக்காக சில பேருங்க அலையறானுக...ஆசை இருக்கு தாசில் பண்ண. ஆனா யோகம் இருக்கு கழுத்தை மேய்க்க?


Narayanan Muthu
செப் 11, 2024 19:49

மன்மோகன் ஆட்சியில் மோடி வெளிநாட்டில் உளறினாரே... தனக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்த தக்காளிச்சாறா


Narayanan Muthu
செப் 11, 2024 19:47

பிஜேபில உள்ள மத்த ஆளெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாங்கன்னு சொல்றீங்களா.


rsudarsan lic
செப் 11, 2024 16:52

கொஞ்சம் பாராளுமன்ற கூட்டத்தில் விளாசுங்கள். முடிந்தால் தகுதி இழப்பு தீர்மானம் கொண்டு வாருங்கள். அம்மா மகன், மகள் மூவரையும்


Sridhar
செப் 11, 2024 14:21

ஆமா, நீங்க நேரத்துல எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை எடுக்கலேன்னா குற்றவாளிகள் நிச்சயமா நிறையவே தயிரியம் அடைஞ்சு இப்படித்தான் பேசுவாங்க. எங்க ஊருலயும் ஆ ராசானு ஒரு ஆளு, ஆயிரக்கணக்கான கோடிகள் கொள்ளையடிச்ச பிறகும் ED சும்மா தம்மாதூடு சொத்தை மொடக்கினத்தை தவிர வேற எந்த நடவடிக்கையும் எடுக்கலேங்கற சந்தோஷத்துல தாறுமாறா பேசிகிட்டு திரியறான் பாருங்க. எப்போ திருடன்களை உடனடியாக தண்டிக்க தயங்கறீங்களோ, அப்போவே நாடு உறுப்புட்டாப்புலதான். அந்த நிலைமைக்கு நீங்கதான் காரணம்ங்கறதுல சந்தேகமே இல்ல.


Nagarajan D
செப் 11, 2024 14:15

அரசாங்கம் இவர் மேல் கடும் நடவடிக்கை எடுத்து இவர் எங்கெல்லாம் சுற்றுகிறார் எவரை எல்லாம் சந்திக்கிறார் என்று நாட்டிற்கு சொல்ல வேண்டும்... இவரையும் இவர் குடும்பத்தையும் வேரோடு அழிக்க வேண்டும்... அல்லது வாழ்நாள் சிறை தண்டனை இவருக்கு நீதிமன்றங்கள் தரவேண்டும் அதுவும் தானாக முன்வந்து ...


HoneyBee
செப் 11, 2024 14:03

ஒரு ஐம்பது வயது பொண்ணு பாத்து கல்யாணம் செய்து வையுங்க யாராவது...


Sivagiri
செப் 11, 2024 13:58

இங்க இந்தியாவில், முழுக்க முழுக்க ஊழல், கொள்ளை அடித்து - தற்போது ஜாமீனில் இருக்கும் ராகுல் , சோனியா , மற்றும் காங்கிரஸ் மேனேஜர்கள் , கூட்டாளிகள் - - இங்கே எதுவும் பேச முடியாது - அங்கே போயி யோக்கியன் வேஷம் போடுறது - - - ஆனாலும் தற்போது அமெரிக்காவில் தேர்தல் நடக்க போவதால் , இந்த ராகுல் , அங்கே வாழும் இந்தியர்கள் அனைவரும் நாங்கள் சொல்பருக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - என்ற மாயையை உண்டாக்கி - கமலாவிடமும் , ட்ரம்மிடமும் , பேரம் பேசி - ஒரு லம்ப் அமௌண்ட்டை லவுட்டீட்டு வர்றதுக்குத்தான் போயிருக்காரு , அதே கதைதான் ஸ்டாலின் , மற்றும் , கர்நாடக சிவகுமார் - - எல்லாம் இப்போ , அங்கே டேரா போடுவது அதுக்குதான் . . .