உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கர் மாஜி முதல்வர் பூபேஷ் பாகல் மகன் கைது

சத்தீஸ்கர் மாஜி முதல்வர் பூபேஷ் பாகல் மகன் கைது

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் ஊழல் வழக்கில், பிறந்த நாள் தினத்தன்று பூபேஷ் பாகல் மகன் சைதன்யாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டில் இன்று (ஜூலை 18) அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மதுபானக் கொள்கை விவகாரத்தில், பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகல் மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=js0myq1r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கில் இன்று துர்க் மாவட்டத்தின் பிலாய் நகரில் உள்ள பாகலின் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து, பூபேஷ் பாகலுக்கு ஆதரவாக காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தனர். இதனால், அவரது வீட்டுக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பின்னர், ஊழல் வழக்கில், பிறந்த நாள் தினத்தன்று பூபேஷ் பாகல் மகன் சைதன்யாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.முன்னதாக, அமலாக்கத்துறை சோதனை குறித்து, பூபேஷ் பாகல் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், கொடுக்கும் பிறந்தநாள் பரிசுகளை உலகின் எந்த ஜனநாயகத்திலும் யாராலும் கொடுக்க முடியாது.இப்போது என் மகன் சைதன்யாவின் பிறந்தநாளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் என் வீட்டை சோதனை நடத்தினர். இந்தப் பரிசுகளுக்கு நன்றி. நான் அவற்றை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Parthasarathy Badrinarayanan
ஜூலை 18, 2025 19:44

10 ரூபா பாலாஜி கூட அப்பாவி எனக் கூறிக் கொண்டிருக்கிறார்


Iyer
ஜூலை 18, 2025 19:34

 மதுபான ஊழலில் டெல்லியில் கெஜ்ரிவாலை கைது செய்து குற்றபத்திரிகை தாக்கல் செய்தீர்கள்.  சட்டிஸ்கரில் மதுபான ஊழலில் நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.  அதைவிட பலமடங்கு அதிகமான தமிழ்நாடு மதுபான ஊழலில் தீவிர நடவடிக்கை எப்போது சார் ?


பிரேம்ஜி
ஜூலை 18, 2025 17:37

பாவம்! பிறந்த நாள் கழிந்து அடுத்த பிறந்த நாளுக்கு முன் தினம் கைது செய்திருக்கலாம்! வெறும் கைது நியூஸோடு சரி! நம்நாட்டில் அரசியல் வாதிகள் தவறே செய்வதில்லை! இது ஒரு பாவ்லா!


V. SRINIVASAN
ஜூலை 18, 2025 13:43

அமுலாக்கத்துறை அதிகாரிகள் எதிர் கட்சி அதிலும் முன்னாள் காங்கிரஸ் கட்சி மந்திரிகளிடம் சோதனை செய்கிறார்கள் அள்ளும் கட்சி அதுவும் பிஜேபி கட்சி மத்திய மந்திரிகள், பிஜேபி முதல்வர்களையெல்லாம் சோதனை இட மாட்டார்களா அவர்களும் பிஜேபி கையாள்களா


M Ramachandran
ஜூலை 18, 2025 13:19

நல்ல துவக்கம். அரசிலில் யிதெல்லாம் சகஜமப்பா.