உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3வது ஆட்சிக் காலத்தில் மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம்: பிரதமர் மோடி உறுதி

3வது ஆட்சிக் காலத்தில் மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம்: பிரதமர் மோடி உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''3வது முறை ஆட்சிக் காலத்தில் மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம்,'' என பிரதமர் மோடி உறுதியளித்தார்.18வது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. முன்னதாக பார்லி., வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பார்லிமென்ட் அரசியலில் இன்றைய தினம் பெருமைக்குரியது மட்டுமல்ல கொண்டாட்டத்திற்குரியது. சுதந்திரத்திற்கு பின் முதன்முறையாக புதிய பார்லி.,யில் புதிய எம்.பி.,க்களுடன் அவை கூடுகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில் புதிய எம்.பி.,க்கள் அனைவரையும் வரவேற்கிறேன், வாழ்த்து தெரிவிக்கிறேன். பார்லி., கூட்டம் சாதாரண மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும். சாதாரண மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றும் கூட்டமாக இது இருக்கும். புதிய உத்வேகம், புதிய உற்சாகத்துடன் பணிகளை துவங்க வேண்டிய பணி நம் முன் இருக்கிறது. 2047ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவை நிறைவேற்றும் வகையில் செயல்படுவோம்.

ஒத்துழைப்பு முக்கியம்

உலகத்தின் பெரிய தேர்தல் பெருமைக்குரிய வகையில் நிறைவு பெற்றிருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையளிக்கும் விஷயம். 60 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பை மக்கள் கொடுத்துள்ளனர். இது பார்லிமென்டிற்கு கூடுதல் முக்கியத்துவத்தை அளிக்கிறது. ஆட்சியை வழிநடத்த பெரும்பான்மை முக்கியம், நாட்டை வழிநடத்த ஒத்துழைப்பு முக்கியம். 140 கோடி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான உழைப்பை முழுமையாக தருவோம்.

மும்மடங்கு வேகம்

கடமை, செயல்பாடு மற்றும் கருணையுடன் எமது ஆட்சி நடைபெறும். அனைவரையும் ஒருங்கிணைத்து பார்லி.,யின் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும். எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட ஜூன் 25 இந்திய அரசியலில் ஒரு கருப்பு நாள். 50 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் ஜனநாயகத்தை காக்க நாம் முழுமையாக முயற்சிப்போம். 3வது முறை ஆட்சிக் காலத்தில் மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம். இரண்டு முறை அரசை வழிநடத்திய அனுபவம் எங்களுக்கு உள்ளது.

பொறுப்பான எதிர்க்கட்சி தேவை

நிலையான ஆட்சியே நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம். நாட்டு மக்களுக்கு சேவையாற்ற எதிர்க்கட்சிகளின் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். தேசத்திற்கு ஒரு நல்ல மற்றும் பொறுப்பான எதிர்க்கட்சி தேவை. 18வது பார்லிமென்ட் இந்திய ஜனநாயகத்திற்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். சாமானிய மக்களின் எதிர்பார்ப்பை எதிர்க்கட்சிகள் பூர்த்தி செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டில் இருந்து வறுமையை முற்றிலும் ஒழிக்க உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

Narayanan
ஜூன் 26, 2024 16:46

வேகம் தெரியவில்லை தமிழக அரசு கலைக்கப்படவேண்டியது . ஏன் செய்யவில்லை .?


spr
ஜூன் 26, 2024 10:10

முதலில் இதுவரை அமுலாக்கத்துறை தொடங்கிய விசாரணையை முழுவதுமாக விசாரித்து, ஒன்று வழக்குக்கு ஆதாரம் இல்லையென்றோ அல்லது ஆதாரத்தை அளித்து அவர்களுக்கு கடுமையான தண்டனையை அளிக்க வேண்டும். இதனை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் செய்யத் தவறும் அமுலாக்கத்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்து அவர்களையும் விசாரணை செய்ய வேண்டும் அதற்கேற்றபடி சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் இதனைக் குறித்த காலத்திற்குள் செய்யாவிடில் இவரது நேர்மை சந்தேகத்துக்குள்ளாகும்


mohamed salim Abdullahhussaini
ஜூன் 25, 2024 14:32

Mr.ND MODI you have a good team Your team work leads to next level growth of this Nation. Sathya meve jayethe Jai Hind


pmsamy
ஜூன் 25, 2024 05:48

பத்து வருஷம் நாசம் பண்ணது போதாதா


Ms Mahadevan Mahadevan
ஜூன் 25, 2024 05:11

மும்பைபைவிட பந்தா உளறல் இல்லாமல் இருந்தால் சரி


Kasimani Baskaran
ஜூன் 25, 2024 04:48

திராவிட ஒழிப்பு தொகுப்பு இரண்டு தீவிரமாக ஆரம்பித்து இருக்கிறார்கள். அது கண்டிப்பாக வெற்றி பெரும்.


Senthoora
ஜூன் 25, 2024 06:47

இவருக்கு திராவிடத்தை விட்டா அரசியல் தெரியாது. எல்லோரையும் மனுஷனா பாருங்க, தமிழ் நாட்டில் மக்கள் தெளிவாக இருக்கிறாங்க.


Mani . V
ஜூன் 25, 2024 03:59

அதானி, அம்பானி ஹாப்பி.


Jysenn
ஜூன் 24, 2024 23:13

Charan Singh was a better PM. This person wasted ten precious years by his inaction. In WB BJP supporters were mercilessly slaughtered and he remained as a mute spectator. In TN BJP supporters were put behind the bars for no fault of them and here too he remained a dumb spectator. He unceremoniously snatched away the train booking concessions given to senior citizens. Instead of removing the notorious toll plazas he allows them to continuously fleece the people. The petrol from Russia would have enabled a price near to Rs 40 per litre but he sells at over 100. He is wasting multiple crores of money on Kissan funds and in TN his Rs 6000 per year hardly es a single vote. A coward mortally afraid of using 356 in fit cases like WB and TN.


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 25, 2024 04:05

i guess you have used very harsh words. you never mentioned the scam free first government since 1947. comparing with an singh is an idiotic thinking. you never noticed the important decisions without considering the vote bank politics. do you what is the meaning of coward? dont you know Modiji hoisted our national flag in the kashmir during the highest time of militancy? you want the scam looter, khan muslim congress back in power to loot our country. wake up.


Sivak
ஜூன் 24, 2024 22:34

பத்து வருடம் வீணாக போனது போல் இருக்கிறது ... இந்துக்களுக்காக எதுவும் அதிரடியாக செய்யவில்லை ... UCC கொண்டு வர படவில்லை ... கோயில்கள் மாநில அரசுகளிடம் இருந்து மீட்க படவில்லை ... இந்து ராஷ்டிரம் என்று அறிவிக்க வில்லை .... திருட்டு திமுக , திரிணமூல் போன்ற ரவுடி கூட்டங்களின் ஆட்சியை கலைக்கவில்லை .... உங்கள் மென்மையான போக்கு சரி வராது .....இன்னும் அதிரடி காட்ட வேண்டும் ...


Jysenn
ஜூன் 24, 2024 21:55

Has no guts to use 356 in WB and TN. Useless and spineless central government.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி