உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமலாக்கத்துறை சம்மனை கண்டு கலக்கம் ஏன்? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

அமலாக்கத்துறை சம்மனை கண்டு கலக்கம் ஏன்? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடில்லி: மணல் குவாரி விவகாரத்தில், கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதில் தமிழக அரசு கலக்கம் அடைவது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்ட விரோதமாகப் பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.இதனைத் தொடர்ந்து 10 மாவட்ட கலெக்டர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறைப் பொறியாளர் திலகம் உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.இதனை எதிர்த்து தமிழக அரசின் பொதுப்பணித்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் செயலாளர், 5 மாவட்ட கலெக்டர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தமிழக அரசும் சம்மனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், சம்மனுக்கு இடைக்கால தடை விதித்தது.சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் முறையிடப்பட்டது. தமிழக அரசும் ரிட் மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று(பிப்.,23) நீதிபதி பெலா எம் திரிவேதி முன்பு விசாரணைக்கு வந்தது.தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என வாதிட்டார்.தொடர்ந்து நீதிபதி, ‛‛ தமிழக அரசு எப்படி ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்? எந்த சட்டத்தின் கீழ் தாக்கல் செய்துள்ளது? கூட்டாச்சி கொள்கைக்கு இது எதிரானது இல்லையா? அமலாக்கத்துறை சம்மனில் மாநில அரசு கலக்கம் அடைந்தது ஏன்? இதில் அரசின் பங்கு என்ன?'' என கேள்வி எழுப்பினார். மேலும், ‛‛மாநில அரசின் நலன் மற்றும் எப்படி ரிட் மனு எப்படி தாக்கல் செய்தது என்பது குறித்து மாநில அரசு விளக்க வேண்டும். மாநில அரசு எப்படி பாதிக்கப்பட்டு உள்ளது? ஆரம்ப கட்ட விசாரணைக்கு தடை விதிப்பது குறித்து உச்சநீதிமன்றம் பரிசீலனை செய்யும். ஆனால், அனைத்து கேள்விகளுக்கு பதில் வேண்டும்'' எனக்கூறிய நீதிபதி, தமிழக அரசு மற்றும் அமலாக்கத்துறை விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

D.Ambujavalli
பிப் 24, 2024 06:53

Oyvu, perra pirakum ‘vidaathu karuppu’ pola thodarkirathe Entha file kku. Evvalavu ‘vaankinom’ enru ethiri kooda vaikkavillaiye?


meenakshisundaram
பிப் 24, 2024 04:50

இதுதானே முக்கிய கேள்வி -மக்கள் மனதில் இருப்பது ,அதை நீதி மன்றமே கேட்டுள்ளது .திமுக அமலாக்கத்துறையை எதிர் கட்சியை போல பாக்குது


நரேந்திர பாரதி
பிப் 24, 2024 03:57

"மணல் குவாரி விவகாரத்தில், கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதில் தமிழக அரசு கலக்கம் அடைவது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது."...அய்யா, இப்பிடி திடீர், திடீர்னு கேள்வி கேட்டா என்ன செய்வோம்? இருங்க, ஒன்றிய அரசு மீது பழிய போட முடியுமான்னு யோசிச்சி சொல்றோம்


Ramesh Sargam
பிப் 24, 2024 00:43

ஊழல் செய்திருக்கிறார்கள். ஆகையால் கலக்கம் திரு நீதிபதி அவர்களே.


M Ramachandran
பிப் 24, 2024 00:14

உபீஸ்கள் சிறிது தங்கள் யோசிக்கும் திரனய்யய் உபயோகப் படுத்த வேண்டும். மக்கள் பநதியய் கொள்ளை யயடிப்பவன் யாராயிருந்தாலும் அவர்கள் சமூக விரோதிகலே. அவர்களுக்கு முட்டு கொடுத்து நாம் தாழ்ந்து விட கூடாது


sankaranarayanan
பிப் 23, 2024 21:03

ரிட் மனு தாக்கல் செய்ததிலிருந்தே தெரிந்துவிட்டது இவர்களுடைய வண்டவாளம் வெளிவரும் என்ற பயந்துதான். இனி உச்சநீதி மன்றமே பச்சைக்கொடி காட்டிடுச்சு இனிமேல்தான் இருக்கு இங்கே அரசியலின் ஆனந்த தாண்டவம்


தாமரை மலர்கிறது
பிப் 23, 2024 20:12

அமலாக்கத்துறை சம்மன் வந்தால் கலக்கமடைவதற்கு காரணம், திமுக அமைச்சர்கள் உச்சா போய்விடுகிறார்கள் சார்.


M Ramachandran
பிப் 23, 2024 18:54

திருடறவனுக்கு தேள் கொட்டினால் போல என்ற பழமொழி தான் ஞ்பாகத்திற்கு வரும்


Anbuselvan
பிப் 23, 2024 18:38

கனிம வள கொள்ளைகளை தமிழகத்தில் நிறுத்தி விட்டால் தமிழகத்தில் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு வரிகளே போடாமல் இருக்கலாம்.


Anand
பிப் 23, 2024 18:12

காரி காரி, காரி காரி துப்பிவிட்டது......


திகழ்ஓவியன்
பிப் 23, 2024 18:48

எதிர்கட்சி ஆட்சி மாநிலம் மட்டும் என் என்று கேட்க வில்லை


vadivelu
பிப் 23, 2024 20:35

நல்ல இருக்கே, எதிர் கட்சி தலைகள் ஊழல் செய்தால் தட்டி கேட்க கூடாதா? எப்படியோ ஊழல்வாதிகளுக்கு தண்டனை கொடுக்கணும் என்று நினைக்க மாட்டீர்களா.ஊழல் செய்து இருக்கிறார்கள் அமலாக்க துறை ரைடு விடுகிறது.என்ன தப்பு.ஆதாரத்தோடு ஆளும் கட்சி தலைவர்களின் ஊழலை வெளி இடுங்கள் , மீடியாக்கள் மூலம் வெளி இடுங்கள்.தன்னால் நீதி மன்றம் கேள்வி கேட்கும், இல்லையேல் ஆதாரத்தோடு கோர்ட்டுக்கு செல்லுங்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை