உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதியில் 38 சதவீத ஓட்டுப்பதிவு

காஷ்மீரில் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதியில் 38 சதவீத ஓட்டுப்பதிவு

புதுடில்லி : ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதிக்கு நேற்று நடந்த தேர்தலில் 38 சதவீதம் ஓட்டுப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.நாடு முழுதும் 18வது லோக்சபாவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கிறது. ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், நான்காம் கட்டமாக, ஒன்பது மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில், 96 தொகுதிகளுக்கு நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதிக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.மொத்தம் 24 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அங்கு 38 சதவீத வாக்குப்பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 38 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வாக்குப்பதிவு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

S S
மே 14, 2024 15:13

பிஜேபி காஷ்மீரில் போட்டியிடுகிறதா?


ஆரூர் ரங்
மே 14, 2024 10:42

முன்பெல்லாம் தீவீரவாத மிரட்டலுக்கு பயந்து வெறும் ஒற்றைப்படை சதவீத வாக்குகளே பதிவாகும். பல பூத் களில் ஒரு வாக்குக் கூட பதிவாகாது. இப்போது 30 சதவீதத்துக்கு மேல் வாக்குபதிவு என்பது ஆச்சர்யம். இத்தனைக்கும் பெரும்பாலான ஹிந்து பண்டிட் பெயர்களை மூர்க்க அதிகாரிகள் நீக்கிவிட்டதால் அவர்கள வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.


veeramani
மே 14, 2024 07:01

காஷ்மீரை பற்றி பேசுகின்ற முஃதி பெஹங்களுக்கும் அபுள்ளைகளுக்கும் கேள்வி வாக்காளர்கள் வாக்களிக்கும் சதவீதம் வெறுமனே சுமார் முப்பத்துஎட்டு மக்கள் ஓடிஒழுந்து கொண்டரர்களா அல்லது ஆட்களே இல்லையா மூன்றில் ஒருபங்கு சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்கும் உங்களது பகுதியில் இந்திய அரசு சிலவே மற்றைய இந்திய பகுதிகளை போல் அல்லாமல் மிக அதிகம் எனவே இனிமேலாவது இந்திய அரசை வசை பாடாமல் இருத்தல்வேண்டும்


Kasimani Baskaran
மே 14, 2024 06:02

மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர்களாவது வாக்களித்தால் அது உண்மையான தேர்தல் என்று ஒத்துக்கொள்ளலாம் ஒரு வேளை இவர்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லையோ?


மோகனசுந்தரம்
மே 14, 2024 03:22

என்ன கூற வருகிறீர்கள்? இதுதான் குறைந்த வாக்கு சதவீதமா அல்லது அதிக வாக்கு சதவீதமா? ஏன் இப்படி குழப்புகிறீர்கள்?


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை