| ADDED : ஜூன் 06, 2024 11:24 PM
புதுடில்லி:ராஜஸ்தான் வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் டில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆவணங்கள், அறிக்கைகளை தாக்கல் செய்ய ஆறு வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அஜய், 24, என்ற வாலிபரை, சிறப்புப் படை போலீசார், கடந்த மாதம் 16ம் தேதி வடமேற்கு டில்லியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மது புகட்டி, போலி என்கவுன்டரில் சுட்டுக் கொன்றதாக புகார் எழுந்தது.இதை மறுத்துள்ள போலீசார், தற்காப்புக்காக அவரை சுட்டுக் கொன்றதாக தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் கடும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி, புறநகர் வடக்கு காவல் துணை ஆணையர், வடமேற்கு மாவட்ட ஆட்சியருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.உரிய ஆவணங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய இவர்களுக்கு ஆறு வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.