உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குஜராத்தில் மேலும் 4 பேருக்கு சண்டிபுரா தொற்று

குஜராத்தில் மேலும் 4 பேருக்கு சண்டிபுரா தொற்று

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: குஜராத்தில் மேலும் 4 பேருக்கு சண்டிபுரா தொற்றுக்கு நேற்று குழந்தை பலியான நிலையில், மேலும் 4 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஈ, கொசு மற்றும் உண்ணிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு வகை தொற்று சண்டிபுரா தொற்று .மஹாராஷ்டிராவின் சண்டிபுரா என்ற கிராமத்தில் 1965ல் முதல்முறையாக இந்த தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, இந்த பெயரால் அழைக்கப்படுகிறது.திடீரென ஏற்படும் கடுமையான காய்ச்சல், கடும் தலைவலி, வாந்தி, வலிப்பு, மனக்குழப்பம் உள்ளிட்டவை அறிகுறிகளாக கூறப்படுகின்றன.நேற்று குஜராத்தின் ஆரவல்லி மாவட்டம், மோட்டா கந்தாரியா என்ற கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரிகளை சோதித்தபோது, அவர் சண்டிபுரா தொற்றால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.இன்று 29 பேருக்கு தொற்று பாதிப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 4 பேருக்கு சண்டிபுரா தொற்று உறுதியாகியுள்ளதாக சபர்கந்தா மாவட்ட சுகாதார அதிகாரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை