உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போதை மாத்திரையுடன் தாய், மகன் உட்பட 4 பேர் கைது

போதை மாத்திரையுடன் தாய், மகன் உட்பட 4 பேர் கைது

பாலக்காடு; பாலக்காடு அருகே, காரில் கடத்திய போதை மாத்திரையுடன், தாய், மகன் உட்பட நான்கு பேரை, கலால் துறையினர் கைது செய்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு கலால் துறையின் துணை ஆணையர் ஷிபு அறிவுரையின்படி, சோதனைச் சாவடி இன்ஸ்பெக்டர் முருகதாஸ் தலைமையிலான படையினர், நேற்று முன்தினம் இரவு, கோவை- - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், வாளையாரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, கோவையில் இருந்து திருச்சூர் நோக்கி வந்த காரை தடுத்து சோதனையிட்டனர். அதில், 12 கிராம் எடை கொண்ட எம்.டி.எம்.ஏ., என்ற போதை மாத்திரை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.இதையடுத்து நடத்திய விசாரணையில், காரில் இருந்தவர்கள் திருச்சூர் கொடுங்கல்லூர் பகுதியைச் சேர்ந்த, அஸ்வதி, 39, அவரது மகன் ஷோண் சன்னி, 20, அஸ்வதியின் நண்பர்களான கோழிக்கோடு எலத்தூர் பகுதியைச் சேர்ந்த மிருதுல், 29, அஸ்வின்லால், 26, என்பது தெரியவந்தது.மேலும், அஸ்வதி உள்ளிட்ட கும்பல், பல ஆண்டுகளாக போதை மாத்திரை கடத்தி வந்து, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட நான்கு பேரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை