உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூரில் 4 பேர் சுட்டுக்கொலை: அடையாளம் தெரியாத நபர் வெறிச்செயல்

மணிப்பூரில் 4 பேர் சுட்டுக்கொலை: அடையாளம் தெரியாத நபர் வெறிச்செயல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இம்பால்: மணிப்பூரின் சூரசந்த்பூர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு முதல் மெய்தி - குக்கி இன மக்கள் இடையே மோதல் நீடித்து வருகிறது. அங்கு, துணை ராணுவத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர். மத்திய அரசின் நடவடிக்கைகளினால் அங்கு அமைதி திரும்பி வருகிறது.இந்நிலையில் சூரசந்த்பூர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர் சுட்டதில் 60 வயது மூதாட்டி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். சுட்டவர் யார், இறந்தவர்கள் யார் என தெரியவில்லை. அவர்களை அடையாளம் காணும்பணி நடந்து வருகிறது. கொலையாளி அருகில் இருந்தே சுட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவத்துக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அங்கு ஏராளமான தோட்டாக்கள் காணப்படுவதால், தானியங்கி துப்பாக்கி மூலம் இச்சம்பவத்தை கொலையாளி நடத்தியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஷாலினி
ஜூன் 30, 2025 19:58

இதுக்கு ஒரு முடிவே கிடையாதா...


ஆனந்த்
ஜூன் 30, 2025 19:56

மணிப்பூரில் எப்போது தான் அமைதி திரும்புமோ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை