உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் நடமாடிய அந்த 4 பேர்: சல்லடை போட்டு தேடும் பாதுகாப்பு படை

காஷ்மீரில் நடமாடிய அந்த 4 பேர்: சல்லடை போட்டு தேடும் பாதுகாப்பு படை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சந்தேக நபர்கள் 4 பேரின் நடமாட்டம் இருப்பதை உறுதி செய்த ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சில நாட்கள் முன்பு குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதி ஒருவரின் மறைவிடத்தை கண்டுபிடித்தனர். அங்கிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகளை கைப்பற்றினர்.அதன் பின்னர், வடக்கு காஷ்மீரில் முஷ்டகாபாத் பகுதியில் உள்ள செடோரி நாளா வனப்பகுதியில் அடையாளம் தெரியாதவர்களின் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அங்கே சோதனையிட்ட பாதுகாப்புப் படையினர் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இந் நிலையில் ரஜௌரி மாவட்டத்தில் சுந்தர்பானி பகுதியில் 4 சந்தேக நபர்கள் நடமாடுவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு முகாமிட்டுள்ள பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்த பகுதியை சுற்றி வைத்துள்ள அவர்கள், சந்தேக நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

m.arunachalam
ஏப் 29, 2025 00:11

இந்த மாதிரி நிகழ்வு நடந்த உடன் ஹெலிகாப்டர் அல்லது செயற்கைகோள் மூலம் அவர்கள் சென்று பதுங்கும் இடத்தை கவனிக்க முடியாதா ?. ஏதாவது வழி இருக்கும். கண்டறிவோம் செயல்படுத்தி முன்செல்வோம்.


சமீபத்திய செய்தி