உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வின் 4 அணிகள் விரைவில் சுற்றுப்பயணம்

பா.ஜ.,வின் 4 அணிகள் விரைவில் சுற்றுப்பயணம்

பெங்களூரு : 'லோக்சபா தேர்தலை முன்னிட்டு கர்நாடகாவில் நான்கு அணிகள் அமைக்கப்பட்டு, அடுத்த வாரம் முதல் சுற்றுப்பயணத்தை துவங்குகின்றன,'' என, பா.ஜ., மாநில பொதுச் செயலர் ராஜிவ் தெரிவித்தார்.பெங்களூரு மல்வேஸ்வரத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த முக்கிய பிரமுகர்கள் சிறப்புக் கூட்டத்தில், கர்நாடக பொறுப்பாளர் ராதா மோகன்தாஸ் அகர்வால் பங்கேற்றார்.ஒவ்வொரு லோக்சபா தொகுதியின் அடிமட்ட அறிக்கை குறித்து விரிவான விவாதம் நடந்தது. 28 லோக்சபா தொகுதிகளின் வெற்றி நிலை, கட்சியின் அடிமட்ட செயல்பாடுகள், லோக்சபா தொகுதிகளில் மாநில தலைவர்களின் சுற்றுப்பயணம், மத்திய தலைவர்களின் நிகழ்ச்சிகள், செயல்பாடுகள் குறித்து விவாதித்தோம்.லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மாநில சுற்றுப்பயணம் மேற்கொள்ள நான்கு அணிகள் அமைக்கப்பட உள்ளன. இவர்களுடன் மேலிடத் தலைவர்கள் ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வர். தொண்டர்கள் தயாராக உள்ளனர்.லோக்சபாவுக்குள் ஓட்டுச்சாவடி தலைவர் தலைமையில் கூட்டம், தேர்தல் நிர்வாக குழுக் கூட்டம், பயனாளிகள் தொடர்பு கூட்டம், சொந்த ஆளுமை மூலம் சமூக பங்களிப்பு செய்தவர்களின் வீடுகளுக்கு செல்வதுடன், பொதுக்கூட்டம் நடத்தப்படும்.மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஏற்கனவே இரண்டு லோக்சபா தொகுதிகளை உள்ளடக்கிய கலபுரகி தொகுதியில் கூட்டம் நடத்தி உள்ளார். சுற்றுப்பயண தேதி விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை