உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் தேடப்பட்டு வந்த 4 ரவுடிகள் டில்லி என்கவுன்டரில் சுட்டுக்கொலை: தேர்தலை சீர்குலைக்க சதி செய்தது அம்பலம்

பீஹாரில் தேடப்பட்டு வந்த 4 ரவுடிகள் டில்லி என்கவுன்டரில் சுட்டுக்கொலை: தேர்தலை சீர்குலைக்க சதி செய்தது அம்பலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹாரில் தேடப்பட்டு வந்த நான்கு பிரபல ரவுடிகளை, டில்லி போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.பீஹாரின் சீதாமர்ஹி மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ரஞ்சன் பதக், அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ளார். அவருடன் பிம்லேஷ் சாஹ்னி, 25, மணிஷ் பதக், 33, அமன் தாக்கூர், 21, ஆகியோரும் சேர்ந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டனர்.கண்காணி ப்பு ரவுடி ரஞ்சன் பதக் தலைமையில் செயல்பட்டு வந்த இந்த கும்பல், 'சிக்மா' என்ற பெயரில் நம் அண்டை நாடான நேபாளத்திலும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.பீஹாரில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் கமிஷனுடன் சேர்ந்து, அம்மாநில போலீசாரும் குற்றப் பின்னணி கொண்டவர்களை கண்காணிக்க துவங்கினர்.அப்போது, சட்டசபை தேர்தலை சீர்குலைக்க ரஞ்சன் கும்பல் சதித் திட்டம் தீட்டிய தகவல் பீஹார் போலீசாருக்கு கிடைத்தது.இந்தச் சூழலில் சீதாமர்ஹி மாவட்டத்தில் அடுத்தடுத்து ஐந்து கொலைகளை செய்து விட்டு, ரவுடிகள் நான்கு பேரும் தப்பியோடினர். அவர்களை பிடிக்கும் பணியில் பீஹார் போலீசார் இறங்கியபோது, அனைவரும் டில்லியில் பதுங்கியது தெரியவந்தது.துப்பாக்கி சூடு இந்நிலையில், டில்லியின் ரோஹினி அருகே நான்கு ரவுடிகளும் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்தது. டில்லி போலீசாருடன் இணைந்து, பீஹார் போலீசாரும் அந்த இடத்திற்கு விரைந்தனர்.போலீசாரை கண்டதும் அந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிக்க முயன்றது. இதைத் தொடர்ந்து, தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் நான்கு பேரும் உயிரிழந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஜெய்ஹிந்த்புரம்
அக் 24, 2025 05:26

என்ன வேணாலும் சொல்லலாம்


ஜெய்ஹிந்த்புரம்
அக் 24, 2025 05:24

வரிசையா அஞ்சு பேரை கொன்னாங்கன்னா, தேர்தலை சீர்குலைக்க சதி செய்ததாக அர்த்தமா? அப்போ வாக்காளர் பட்டியலில் 20-30 லட்சம் பேரை திட்டமிட்டு நீக்கி இறந்தவர்கள் என்று சாகடிச்ச தேர்தல் கமிசனையும் அதை செய்ய வைத்தவர்களையும் எனகவுன்டர் பண்ணுவாங்களா?


Palanisamy Sekar
அக் 24, 2025 05:19

இந்த மாதிரியான கடுமையான நடவடிக்கையை அடுத்தடுத்து தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் தொடரவேண்டும். அப்போதுதான் அரசியல் ரவுடிகளுக்கு சற்றேநும் பயம் இருக்கும். குறிப்பாக தமிழ்நாட்டில் அதனை உடனே செய்திட வேண்டும். தேர்தல் சீர்குலைக்கும் பணப்பட்டுவாடா கூடத்தான் மிக ஆபத்தானது. அதனை செய்கின்ற எவரையும் விட்டுவைக்கவே கூடாது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் தேர்தல் ஆணையம் தனது கவனத்தை இப்போதிருந்தே கண்கொத்தி பாம்பாக கவனிக்க வேண்டும்.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 24, 2025 05:19

தேர்தலை சீர்குலைக்க சதி செய்தது அம்பலம் -ஓட்டு திருட்டுக்கும் என்கவுண்டர் செய்வார்களா?