உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜஸ்தானில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 4 பேர் பலி: இருவர் கவலைக்கிடம்

ராஜஸ்தானில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 4 பேர் பலி: இருவர் கவலைக்கிடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நகைக்கடையில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.இறந்தவர்கள் சஞ்சீவ் பால், ஹிமான்ஷு சிங், ரோஹித் பால் மற்றும் அர்பித் யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ரசாயனக் கழிவுகளில் எஞ்சியிருக்கும் தங்கம் மற்றும் வெள்ளித் துகள்களை மீட்டெடுக்க 10 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டியில் இறங்குமாறு தொழிலாளர்கள் வற்புறுத்தப்பட்டுள்ளனர். நகைக் கடை உரிமையாளர் கூடுதல் பணம் தருவதாக கூறியதால் கழிவுநீர் தொட்டியில், தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
மே 27, 2025 21:37

ஏதேதோ சாதனை படைக்கிறோம். விண்ணுக்கு ராக்கெட் விடுகிறோம். S-400 missile உதவியுடன் எதிரிநாட்டு டிரோன்களை அழிக்கிறோம். கோவிட் காலத்தில் நம் நாட்டு தயாரிப்பு வாக்சின்களை மற்ற நாடுகளுக்கு அனுப்பி அங்குள்ள மக்களை காப்பாற்றினோம். ஆனால்.... ஆனால் இதுபோன்ற அவலங்கள் தொடர்வதுதான் மிகவும் வருத்தமளிக்கிறது. இவ்வளவு வளர்ச்சி கண்ட நம் தேசத்தில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இன்னும் மனிதன் இறங்கி சுத்தம் செய்வது ஏற்றுக்கொள்ளமுடியாது. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஏதாவது புதிய வழியை இயந்திரங்களை கண்டுபிடிக்கவேண்டும். அப்பொழுது நாம் பெருமை கொள்வோம் நம் நாடு வளர்ச்சி அடைந்த நாடு என்று.


அப்பாவி
மே 27, 2025 18:28

டபுள்சர்க்கார் சல்த்தா ஹை உதர்.


Nada Rajan
மே 27, 2025 17:42

உயிரிழந்த அப்பாவி தொழிலாளர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை