உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துவாரகா கோல்ப் மைதானத்தில் 40 சதவீத கட்டண சலுகை அறிவிப்பு

துவாரகா கோல்ப் மைதானத்தில் 40 சதவீத கட்டண சலுகை அறிவிப்பு

புதுடில்லி:துவாரகா கோல்ப் மைதான உறுப்பினர் சேர்க்கைக் கட்டணத்தில், பண்டிகை கால சலுகையாக 40 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என டில்லி மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, டில்லி மேம்பாட்டு ஆணைய அதிகாரி ஒருவர் கூறிய தாவது: ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் துவாரகா கோல்ப் மைதானம் 158 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு, 18 ஹோல் கோர்ஸ், 7,377 யார்டுகள் அமைந்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய கோல்ப் மைதானமாக திகழும் துவாரகா கோல்ப் மைதானத்தில் உணவகம், மாநாட்டு அரங்கம், அரங்கங்கள், நீச்சல் குளம் உள்ளிட்டவையும் அமைந்துள்ளன. மேலும், மிகச்சிறந்த பயிற்சி அளித்து ஏராளமான கோல்ப் வீரர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். துவாரகா கோல்ப் மைதானத்தில் உறுப்பினர் சேர்க்கை கட்டணத்தில் பண்டிகை கால சலுதை வழங்க, ஆணையத்தின் தலைவரும், துணைநிலை கவர்னருமான சக்சேனா உத்தரவிட்டார். இதையடுத்து, சேர்க்கை கட்டணத்தில் 40 சதவீத தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு லட்சத்து 20,000 ரூபாயும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு லட்சத்து 80,000 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதர உறுப்பினர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மூன்று லட்சத்து 60,000 ரூபாயும், ஐந்து ஆண்டுகளுக்கு ஐந்து லட்சத்து 40,000 ரூபாயும் தற்போது வசூலிக்கப்படுகிறது. பண்டிகை கால சலுகையாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடி-ப்படையில் முதலில் வரும் 1,000 உறுப்பினர்களுக்கு இந்தக் கட்டணத்தில் 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை