உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓடும் பஸ்சில் தீ விபத்து 44 பயணியர் தப்பினர்

ஓடும் பஸ்சில் தீ விபத்து 44 பயணியர் தப்பினர்

ஆலப்புழா: கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியில், நேற்று காலை கேரள மாநில போக்குவரத்து கழக பஸ், 44 பயணி யருடன் சென்றது. காயம்குளம், ஆலப்புழா இடையே அந்த பஸ் சென்றபோது, கருகும் வாசனை வந்ததை அடுத்து, டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார்.அப்போது பஸ்சின் பின்பகுதியில் தீப்பற்றி எரிவதை அறிந்த டிரைவர் விரைந்து செயல்பட்டு, பயணியரை உடனே கீழே இறங்கும்படி எச்சரித்தார். பஸ்சில் இருந்த கல்லுாரி மாணவர்கள் 20 பேர் உட்பட, 44 பேரும் விரைந்து கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீ விபத்து பற்றி அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். எனினும் பஸ் முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை