உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய எம்.பி.,க்களில் 251 பேர் மீது கிரிமினல் வழக்கு

புதிய எம்.பி.,க்களில் 251 பேர் மீது கிரிமினல் வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 543 எம்பி.,க்களில் கிரிமினல் வழக்கு உள்ளவர்கள் மொத்தத்தில் 46 சதவீதம் பேர் என்றும் , இது வரை இல்லாத அளவிற்கு கிரிமினல் வழக்கு உள்ள எம்.பி.,க்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 2019ல் 233 எம்.பி.,க்கள், 2014ல் 185எம்.பி.,க்கள், , 2009ல் 162 எம்.பி.,க்கள், 2004 ல் 125 எம்.பி.,க்கள், குற்றப்பின்னணி உடையவர்கள். தற்போது தேர்வாகி உள்ள எம்.பி.,க்களில் 251 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. இதில் 170 பேர் கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட கொடூர குற்றம் புரிந்தவர்கள் ஆவர். இந்த கொடூர குற்றம் புரிந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. 27 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 15 பேர் மீது பெண்கள் மீது தாக்குதல், வன்கொடுமை, பாலியல் தொடர்பான வழக்கு உள்ளது.

தி.மு.க.,வில் 13 பேர்

பா.ஜ.,வில் மொத்தம் வெற்றி பெற்ற 240 பேரில் 94 பேர் மீது கிரிமினல் வழக்கும், காங்கிரஸ் கட்சியில் 99 பேரில் 49 பேர் மீதும், சமாஜ்வாதியில் 21 பேர் மீதும் திரிணாமுல் காங்கிரஸ்சில்13 பேர் மீதும், திமுகவில் 13 பேர் மீதும் கிரிமினல் வழக்குள் உள்ளது. இவ்வாறு இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

MADHAVA NANDAN
ஜூன் 07, 2024 09:25

அம்பேத்கரின் சட்டப்புத்தகம் செல்லரித்துக்கொண்டிருக்கிறது என்பதும் திருடர்களால் திருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நேரம். இனியும் உறங்காமல் அறிவை தேடுங்கள் நல்லவர்களை தேர்ந்தெடுங்கள் . உங்கள் பணியாட்கள் நல்லவர்களாக இருந்தால்தான் முதலிகளான நீங்களும் உங்கள் சந்ததிகளும் நிம்மதியாக வாழ முடியும் .இல்லையேல் உங்கள் சந்ததிகள் அவர்களின் அடியாட்களாக வாழவேண்டி வரும். எழுமின் விழிமின் ...........


இராம தாசன்
ஜூன் 06, 2024 23:39

வெற்றி பெற்ற இரண்டு வேட்பாளர்கள் சிறையில் இருக்கிறார்கள் - அவர்களால் எவ்வாறு சேவை செய்ய முடியும்.. அவர்களை தேர்ந்து எடுத்த மக்களை என்னவென்று சொல்ல? நீதி மன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கினாலும் வழங்கும் - மக்களுக்கு சேவை செய்ய / நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ள


subramanian
ஜூன் 06, 2024 21:11

அரசியல்வாதிகளின் வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் , அரசியல்வாதிகளின் பணத்தில் அமைக்க வேண்டும். மக்களின் வரிப்பணித்தில் எதற்கு வீண்செலவு.? ஜாமீன், வாய்தா, மேல்முறையீடு எல்லாம் சுண்டல்போல கொடுக்கப்படுகிறது , எல்லாம் மக்கள் வரிப்பணித்தில் எதற்கு செய்யவேண்டும்...? நீதிபதிகள் ஆத்மபரிசோதனை செய்துகொள்ளவேண்டும். இல்லையென்றால் நீங்கள்சொல்லும் நீதியே உங்களை அழிக்கும்.


sankaranarayanan
ஜூன் 06, 2024 21:03

இந்தியாவில் நீதிமன்றங்களின் அனுமதியோடுதான் இந்த அரசியல் குற்றவாளிகள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் இதை தடுக்க இங்கே சட்டமே கிடையாது சாதாரண மக்கள் ஏதாவது தவறு செய்தால் உடனே அவர்களை அலுவலகத்திலிருந்து டிஸ்மிஸ் செய்ய மட்டும் இந்திய சட்டம் அனுமதிக்கிறது என்ன வினோதம்யாய இந்திய சட்டம் அரசியல்வாதிகளுக்கு ஒன்று சாதாரண குடிமக்களுக்கு ஒன்று


Vathsan
ஜூன் 06, 2024 19:56

என்ன பிஜேபி மேப் 94 பேர் கிரிமினலா?


S Sivakumar
ஜூன் 06, 2024 17:37

இந்தியா ஜனநாயகத்தின் மக்களின் நம்பிக்கை குறைந்து விடுமோ என்று எண்ணும் வகையில் குற்றம் சாட்டப்பட்டும் தைரியமாக பல வழியாக வாழ முடியும் என்று நிரூபணம் செய்து கொண்டுள்ளனர்.


Siva
ஜூன் 06, 2024 16:41

இது தான் மக்கள் கூமூட்டை, . மொத்த திருடனுக மக்களை ஆளும் சக்தி. மக்களை முளை சலவை இயந்திரங்கள். வாழ்க ஊழல் தக்காளி


Lion Drsekar
ஜூன் 06, 2024 16:08

இதுதான் ஜனநாயகம் இதற்குத்தான் உச்சத்தில் இருப்பவர்கள் ஓய்வு பெற்றவர்கள் பாடுபடுகிரார்கள் . வாழ்த்துக்கள் வந்தே மாதரம்


மேலும் செய்திகள்